Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிரிக்கெட் இப்போது விளையாட்டு அல்ல.. வியாபாரமாக மாறிவிட்டது..பாகிஸ்தான் வீரர் ஷாகித் அப்ரிடி கருத்து

கராச்சி : டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி முதல் சுற்றில் இருந்து வெளியேறி இருப்பது சர்வதேச கிரிக்கெட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் மீண்டும் பணத்திற்காக தான் வீரர்கள் விளையாடுகிறார்கள் தவிர நாட்டுக்காக விளையாடுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பாகிஸ்தான் போல் நியூசிலாந்து அணியும் முதல் சுற்று இருந்து வெளியேறியது. இந்த சூழலில் நியூசிலாந்து அணியின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்த கேன் வில்லியம்சன் தற்போது நியூசிலாந்து நாட்டின் புதிய ஊதிய ஒப்பந்தத்தில் கையெழுத்து இட போவதில்லை என்று கூறி இருக்கிறார்.

t20 world cup ind vs afg virat kohli indian national cricket team cricket 20 2024

மேலும் அவர் உலகம் முழுவதும் நடைபெறும் டி20 தொடரில் விளையாட போவதாகவும் அறிவித்திருக்கிறார். இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி ,கிரிக்கெட் தற்போது வியாபாரமாக மாறிவிட்டதாக கருத்து தெரிவித்திருக்கிறார். இது குறித்து பேசிய அவர் பணம் வந்தவுடன் அனைத்துமே மாறிவிட்டது.

ஒரு காலத்தில் கிரிக்கெட் விளையாட்டாக கருதப்பட்டது. தற்போது வியாபாரமாக மாறிவிட்டது. இதன் மூலம் பலர் பணத்தை வைத்து கிரிக்கெட்டை வணிக மயமாக்கி விட்டார்கள். இதன் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் லீக் தொடர்கள் நடைபெற்று வருகிறது. ஆனால் உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ஐபிஎல் தான் இதற்கு ஒரு தொடக்கப்பள்ளி.

உலகம் முழுவதும் உள்ள லீக் தொடர் தொடங்குவதற்கு ஐ பி எல் ஒரு காரணமாக மாறி இருக்கிறது. ஐபிஎல் மூலம் வெள்ளை நிற பந்து கிரிக்கெட்டில் பணம் கொட்டுகிறது. ஒரு காலத்தில் இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட் விளையாடுவதற்கு நல்ல முறையில் பணம் கிடைக்கும். ஆனால் இதற்காக ஒவ்வொரு வீரர்களும் ஆறு மாதம் வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும்.

ஆனால் தற்போது ஒவ்வொரு லீக்கிலும் பணம் விளையாடுகிறது. இதன் மூலம் பணம் கிடைக்கிறது என்பதற்காக வீரர்கள் தற்போது லீக் தொடரில் விளையாடுவதற்கு தான் ஆர்வம் காட்டுகிறார்கள். பலரும் நாட்டுக்காக விளையாடுவதை தவிர்த்து வருகிறார்கள். நாட்டுக்காக விளையாடுவது தான் மிகப்பெரிய சாதனை. அது மனதளவில் திருப்தியை அளிக்கும்.

எனினும் நாட்டுக்காக விளையாட முடியாத பல வீரர்களுக்கு இதுபோன்ற தொடர்கள் ஒரு வாய்ப்பாக மாறுகிறது. இதன் மூலம் கிரிக்கெட் வீரர்களின் பணக்கஷ்டம் தீர்கிறது. இதனால் ஒவ்வொரு வீரர்களும் தங்களது குடும்பத்தை பார்த்துக் கொள்கிறார்கள். இது ஒரு நல்ல விஷயம்தான் என்றும் ஷாகித் அப்ரிடி கூறியுள்ளார்.

Story first published: Thursday, June 20, 2024, 7:02 [IST]
Other articles published on Jun 20, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+