Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் ஆப்ரிடி தங்கை காலமானார்.. இறுதி சடங்கில் பங்கேற்பாரா ஷாகின்?

லாகூர் : பிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் ஆப்ரிடியின் தங்கை காலமானார். பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான ஷாகித் ஆப்ரிடி தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று இருக்கிறார்.

இது மட்டுமல்லாமல் இந்தியாவிலும் அவருக்கு அதிக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் ஷாகித் ஆப்ரிடி தற்போது சமூக வலைதளத்தில் ஒரு பதிவை போட்டிருக்கிறார்.

Pakistan Legend Shahid afridi sister passed away

முதலில் தனது சகோதரி உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருவதாகவும் அவர்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் ஆப்ரிடி கூறி இருந்தார். இந்த நிலையில் தற்போது வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில் இறைவனிடமிருந்தே நாம் வந்திருக்கிறோம். மீண்டும் இறைவனிடமே செல்கிறோம். என்னுடைய கனத்த இதயத்துடன் இதை கூறுகிறேன்.

Pakistan Legend Shahid afridi sister passed away

என்னுடைய பாசமிக்க சகோதரி தற்போது காலமாகிவிட்டார். அவருக்கான ஜனாஸா தொழுகை இன்று மதியம் ஜக்கரியா பள்ளிவாசலில் நடைபெறும் என்று ஆப்ரிடி கூறியிருக்கிறார். ஆப்ரிடியின் இந்த இழப்பிற்கு பல ரசிகர்களும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான ஷாகின் அப்ரிடி சையது அப்ரிடி மருமகன் ஆவார்.

இதனால் ஷாகித் ஆப்ரிடியின் அக்கா தற்போது மிக நெருங்கிய சொந்தமாக மாறி இருக்கிறார். இதனால் ஆப்ரிடி பாகிஸ்தானுக்கு சென்று இறுதி சடங்கில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பாகிஸ்தான் அணி வரும் 20ஆம் தேதி ஆஸ்திரேலியாவை பெங்களூரில் எதிர்கொள்கிறது. இந்த போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் அப்ரிடி பாகிஸ்தான் செல்வாரா இல்லை இங்கேயே தங்கி விடுவாரா என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.

Story first published: Tuesday, October 17, 2023, 15:11 [IST]
Other articles published on Oct 17, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+