லாகூர் : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பெரும்பான்மையான அணிகள் ஐந்து ஆட்டங்களில் விளையாடிவிட்டது. இதில் தோல்வியே தழுவாமல் இந்திய அணி 10 புள்ளிகள் உடன் முதலிடத்தில் இருக்கிறது.

8 புள்ளிகள் நியூசிலாந்து இரண்டாவது இடத்திலும், 6 புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்கா மூன்றாவது இடத்திலும் 4 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா நான்காம் இடத்திலும் இருக்கிறது. இதேபோன்று பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் போன்ற அணிகளும் தலா நான்கு புள்ளிகளுடன் முறையே ஐந்து மற்றும் ஆறாவது இடத்தில் இருக்கிறது.
இவர்களை ரன் ரேட் மட்டும் தான் பிரிக்கிறது. இந்த நிலையில் உலக கோப்பையை இம்முறை எந்த அணி வெல்லும் என்பதை காரணத்துடன் சோயிப் மாலிக் பட்டியலிட்டு இருக்கிறார். அது என்னவென்று தற்போது பார்க்கலாம். விராட் கோலி போன்ற ஒரு வீரர் நெருக்கடியான சமயத்தில் தான் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற வைப்பார். நெருக்கடியான சமயம் அவருக்கு வாய்ப்பை தேடி தரும்.

அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு விராட் கோலி சதம் அடிப்பார். இது போன்ற பல போட்டிகளில் அணிக்கு வெற்றியைத் தேடி விராட் கோலி கொடுத்திருக்கிறார்.இதன் மூலம் இன்ஸ்டாகிராமில் பல ரசிகர்களை அவர் பெறுகிறார். இது போன்ற அன்பை பெறுவதற்கு சரியான ஆள் விராட் கோலி தான். கில்லும் நியூஸிலாந்து அணிக்கு எதிராக நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ரோகித் சர்மா மட்டும் அன்றைய ஆட்டத்தில் தொடர்ந்து விளையாடி இருந்தால் அவரே போட்டியை முடித்து இருப்பார். இந்திய அணியின் பேட்டிங் வரிசை பலமாகவும், நீளமாகவும் இருக்கிறது. நியூசிலாந்துக்கு எதிராக கோலி என்ன செய்தார் என்று அனைவருக்குமே தெரியும். கே எல் ராகுலும் மற்ற வீரர்களின் மீது இருக்கும் பாரத்தை எடுத்துக் கொள்கிறார். நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் சூரியகுமார் ஆட்டம் இழக்கவில்லை என்றால் தன்னுடைய திறமையை அவர் காட்டியிருப்பார்.
முஹம்மது ஷமியின் பந்துவீச்சு மூலம் நியூசிலாந்து அணி 350 ரன்கள் பெறவிடாமல் இந்தியா பார்த்துக் கொண்டது. நியூசிலாந்துக்கு எதிரான வெற்றியில் ஷமியின் பங்கு மிகவும் முக்கியமானது. முதலில் அவர் அதிக ரன்களை கொடுத்தாலும் பிறகு நெருக்கடியான லைனில் பந்து வீசி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

இதன் மூலம் இந்திய அணி ஒரே வேகப்பந்துவீச்சு படையை தான் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை அவர் உணர்த்திருக்கிறார். இந்தியாவின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு பலம் வாய்ந்ததாக இருக்கிறது. எனவே இந்த உலகக் கோப்பையை இந்தியா தான் வெல்லும். இந்தியா இந்த உலகக் கோப்பை வெல்லாது என்று சொல்ல எந்தக் காரணமும் எனக்குத் தெரியவில்லை என்று சோயிப் அக்தர் கூறியுள்ளார்.