Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்படி தான் நாட்டுக்காக விளையாடணும்.. பகையை மறந்து இந்தியாவை பாராட்டி தள்ளிய பாகிஸ்தான் வீரர்கள்

கராச்சி : டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்றது பலருக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும் நம்மை சுற்றி இருக்கும் நாட்டினருக்கு கொஞ்சம் அது எரிச்சலையே கொடுத்திருக்கும். இந்தியா தொடர்ந்து வெற்றி பெற்ற போது நமது அண்டை நாட்டினர் இந்தியா பந்தை சேதப்படுத்தி தான் ரிவர்ஸ் ஸ்விங் செய்கிறது என்று பேசினார்.

ஆனால் 30 பந்துக்கு 30 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் இருந்து இந்தியா வெற்றி பெற்றதை யாராலும் பாராட்டாமல் இருக்க முடியாது. இதனால் பகையை மறந்து பல முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவை பாராட்டி தள்ளி இருக்கிறார்கள்.

t20 world cup india cricket team virat kohli 20

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் ஜாம்பவான் ஜாகிர் அபாஸ், நான் ரோகித் சர்மாவின் தீவிர ரசிகன். அவருடைய பேட்டிங்கை நான் எப்போதுமே தொலைக்காட்சியில் பார்ப்பேன். கோலி எவ்வளவு பெரிய சிறந்த வீரர் என்று அவர் படைத்த சாதனையை சொல்லும்.தன் நாட்டுக்காக ரோகித் சர்மா உலக கோப்பையை வென்றெடுப்பதை நினைக்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான் ஜாவித் மியாண்டட், ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும், நாம் தொடர்ந்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பார்ப்போம். விராட் கோலி கிரிக்கெட்டுக்காக எவ்வளவு தீவிரமாக பயிற்சி செய்து தன்னுடைய உடல் தகுதியை பேணி வருகிறார் என்பது மற்ற வீரர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் அவரை பின்தொடரும் ரசிகர்களுக்கும் ஊக்கத்தை கொடுக்கின்றது என்று கூறியுள்ளார். இதை தொடர்ந்து பேசிய பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வக்கார் யூனிஸ் நெருக்கடியான கட்டத்தில் விராட் கோலியும், ரோகித் சர்மாவும் நின்று இந்திய அணியை காப்பாற்றி இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் நாட்டிற்காக தற்போது உலக கோப்பையை கைப்பற்றி இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் பும்ரா தான் இந்தியாவின் மேட்ச் வின்னர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதை தொடர்ந்து பேசிய சையது அப்ரிடி விராட் கோலியும், ரோகித் சர்மாவும் இந்தியாவுக்காக சிறப்பான ஆட்டங்களை விளையாடி இருக்கிறார்கள். ரோகித் சர்மா தான் கைதேர்ந்த ஒரு தலைவன் என்பதை நிரூபித்து இருக்கிறார் என்று கூறியுள்ளார். இதை தொடர்ந்து பேசிய மோஷின் கான்,நாட்டுக்காக இப்படி தான் போட்டிகளை விளையாட வேண்டும். இப்படித்தான் ஓய்வும் பெற வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

Story first published: Monday, July 1, 2024, 20:26 [IST]
Other articles published on Jul 1, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+