Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடப்பாவமே.. முதல் டெஸ்ட்டில் அதிரடி காட்டி.. 2வது டெஸ்ட் போட்டியில் படு கேவலமாக வீழ்ந்த பாக்.!

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சூப்பராக வென்ற நிலையில் 2வது டெஸ்ட் போட்டியில் படு கேவலமாக தோற்றுள்ளது பாகிஸ்தான்.

பாகிஸ்தான் அணியின் இந்த கேவலமான தோல்விக்கு பேட்ஸ்மேன்களின் அலட்சியமான ஆட்டமே காரணம் என்று பல பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் சாடியுள்ளனர்.

இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஓல்டு டிராப்போர்டில் நடைபெற்றது. இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 8 விக்கெட் இழப்பிற்கு 589 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஜோ ரூட் 254 ரன்களும், அலைஸ்டர் குக் 105 ரன்களும் சேர்த்தனர்.

சுருண்டு போன பாகிஸ்தான்

சுருண்டு போன பாகிஸ்தான்

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி கிறிஸ் வோக்ஸின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியால் 198 ரன்னில் சுருண்டது. கேப்டன் மிஸ்பா உல் ஹக் அதிகபட்சமாக 52 ரன்கள் சேர்த்தார். இங்கிலாந்து அணியின் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டும், மொயீன் அலி, பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.

பரிதாப தோல்வி

பரிதாப தோல்வி

இங்கிலாந்து அணி 391 ரன்கள் முன்னிலை பெற்ற போதிலும் பாலோ-ஆன் கொடுக்காமல் தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி 2-வது இன்னிங்சில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து இங்கிலாந்து 564 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 565 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. பெரிய வெற்றி இலக்கை நோக்கி பயணம் செய்த பாகிஸ்தான் அணி 234 ரன்னில் சுருண்டு ஆல் அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து 330 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது.

கேவலமான தோல்வி

கேவலமான தோல்வி

இந்தத் தோல்வி குறித்து முன்னாள் பந்து வீச்சாளர் சோயப் அக்தர் கூறுகையில் அலட்சியமான ஆட்டம். எந்த திட்டமும் இல்லை. இப்படி ஒரு மோசமான ஆட்டத்தைப் பார்த்ததே இல்லை.

கிழிஞ்சு போச்சு

கிழிஞ்சு போச்சு

பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களின் முகத்திரை இந்த போட்டியில் கிழிந்து விட்டது. இதுபோன்ற ஆடுகளத்தில் பாகிஸ்தான் ஒரு போதும் சரியாக ஆடியதே இல்லை. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என்றாலே பாகிஸ்தானுக்கு திணறல்தான் வருகிறது என்று கூறியுள்ளார் அக்தர்.

ஆளுக்கு 4!

ஆளுக்கு 4!

இந்த வெற்றியானது இங்கிலாந்துக்கு டெஸ்ட் வரலாற்றில் 4வது பெரிய வெற்றியாகும். அதேசமயம், பாகிஸ்தானுக்கு 4வது கேவலமான தோல்வியாகும். லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் இளம் வீரர் யாரிசின் அட்டகாசமான பந்து வீச்சு காரணமாக வென்ற பாகிஸ்தானுக்கு 2வது போட்டியில் இப்படி கேவலமான தோல்வி கிடைத்தது அதன் ரசிகர்களை அதிர வைத்து விட்டது.

Story first published: Tuesday, July 26, 2016, 21:00 [IST]
Other articles published on Jul 26, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+