For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வெளியேறியது பாக்.. இந்தியாவுக்கு செம வாய்ப்பு.. இது நடந்தால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு போகலாம்

மும்பை : 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் தகுதி பெறும் வாய்ப்பு பறிபோனது. முல்தானில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இங்கிலாந்திடம் தோல்வி அடைந்ததன் மூலம் அந்த அணி 2-0 என்ற கோல் கணக்கில் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இழந்தது.

இந்த நிலையில் வங்கதேசத்திற்கு எதிராக இந்தியாவின் முதல் டெஸ்ட் நாளை தொடங்குகிறது. இது தற்போது முக்கியத்துவம் வாய்ந்த தொடராக கருதப்படுகிறது.

Pakistan loss became advatage for india in world test championship

இந்தியா தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணையில் 4வது இடத்தில் உள்ளது. இதில் 52.08 சதவீத புள்ளிகள் இந்தியா பெற்றள்ளது. ஆனால், பாகிஸ்தான் 42.42%உடன் 6வது இடத்தில் உள்ளது. இந்தியாவை விட முன்னதாக அணிகள் 3வது இடத்தில் இலங்கை 53.33% சதவிதத்துடனும், இரண்டாவது இடத்தில் தென்னாப்பிரிக்கா 60%சதவிதத்துடனும், முதலில் ஆஸ்திரேலியா 75% சதவிதத்துடனும் உள்ளன.

முதல் 2 இடங்களை பிடிக்கும் அணியே இறுதிப் போட்டிக்கு முதல் தகுதி பெறும். இந்தியாவை பொறுத்தவரை இன்னும் 6 போட்டிகள் எஞ்சி உள்ளன. வங்கதேசத்திற்கு எதிரான 2 , மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சொந்த மண்ணில் நான்கு போட்டிகள் உள்ளன. இந்திய அணி குறைந்தபட்சம் ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றால், இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். வங்கதேசத்துக்கு எதிராக தொடரை முழுமையாக இந்தியா வென்று விட்டால் அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ஒரு போட்டியில் தோற்றால் கூட இந்தியாவுக்கு இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது.

இதே போன்று ஆஸ்திரேலியா அதன் சொந்த மண்ணில் வரும் 17 ஆம் தேதி முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள உள்ளது. இதே போன்று நியூசிலாந்துக்கு எதிராக இலங்கை 2 டெஸ்டில் விளையாடுகிறது.இதில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றால் தென்னாப்பிரிக்காவின் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பு குறைந்துவிடும். இதே போன்று நியூசிலாந்து வென்றால் இலங்கையில் வெற்றி வாய்ப்பு பாதிக்கும். அது இந்தியாவுக்கு சாதகமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, December 13, 2022, 23:52 [IST]
Other articles published on Dec 13, 2022
English summary
Pakistan loss became advatage for india in world test championship வெளியேறியது பாக்.. இந்தியாவுக்கு செம வாய்ப்பு.. இது நடந்தால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு போகலாம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+