
எதிர்ப்பு
காஷ்மீர் தாக்குதலில் சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட இந்திய ராணுவ வீரர்கள் பலியான சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும் ஜூன் 16 அன்று உலகக்கோப்பை தொடரில் நடைபெற உள்ள லீக் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணியை சந்திக்கக் கூடாது என கூறி வருகின்றனர்.

பாகிஸ்தான் பேச்சுவார்த்தை
இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு இது தொடர்பாக பிசிசிஐ-யுடன் பேச உள்ளதாக சில தகவல்கள் கசிந்துள்ளன. ஐசிசி நடத்தவுள்ள கூட்டம் விரைவில் துபாயில் நடைபெற உள்ளது.

உலகக்கோப்பை போட்டி
இதில் கலந்து கொள்ளும் போது பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு இந்தியாவின் பிசிசிஐ-ஐ நேரடியாக தொடர்பு கொண்டு பேச முயற்சிக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, உலகக்கோப்பை போட்டியில் இந்தியா ஆடுமா? என உறுதி செய்யும் முயற்சியாக இது இருக்கலாம் என கூறப்படுகிறது.

நாக் - அவுட் குழப்பம்
உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்தியா ஆடாமல் இருக்கலாம். ஆனால், ஒருவேளை அரையிறுதி அல்லது இறுதிப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணியை சந்திக்க முடியாது என கூற முடியுமா எனவும் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இது தான் விஷயம்
அனேகமாக, இந்த காரணத்தை முன் வைத்து தான் பாகிஸ்தான், பிசிசிஐ-யிடம் பேசும் என தெரிகிறது. எனினும், பிசிசிஐ அதிகாரிகளில் பலர் இந்தியா - பாகிஸ்தானுடன் ஆடக் கூடாது எனவும், சிலர் மத்திய அரசு எடுக்கும் முடிவை ஏற்கலாம் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இருதரப்பு கிரிக்கெட் இல்லை
2008 மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவத்துக்கு பின்னர் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர்கள் நடப்பதில்லை. 2012இல் ஒருமுறை மட்டுமே இருதரப்பு கிரிக்கெட் போட்டிகள் நடந்தன. அதிலும் பல பிரச்சனைகள் எழுந்தன.

ஐசிசி தொடரும் பிரச்சனை
ஐசிசி நடத்தும் தொடர்களில் மட்டுமே இந்தியா - பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டு வருகிறது. தற்போது, ஐசிசி-யின் கட்டுப்பாட்டில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரிலும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறக் கூடாது என குரல் எழுந்துள்ளது, கிரிக்கெட் உலகில் நிச்சயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

பிசிசிஐ கேட்குமா?
பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு துபாயில் என்ன பேசினாலும், பிசிசிஐ அதற்கு உடன்படப் போவதில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இந்த விவகாரத்தில் மத்திய அரசு என்ன சொல்கிறதோ அதை தான் பிசிசிஐ செய்யும்.


Click it and Unblock the Notifications