Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நோ சான்ஸ்..! உலக கோப்பை இந்த முறை பாகிஸ்தானுக்கு தான்…! இவரு இப்படி சொல்லலாமா? நம்ப முடியலையே..!

மும்பை:உலக கோப்பை இந்த முறை பாகிஸ்தானுக்கு தான் கிடைக்கும் என்று தாதா சவுரவ் கங்குலி கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

உலக கோப்பையில் யாருக்கு மகுடம் என்று ஒரு போட்டியே வைக்கலாம் போல தெரிகிறது. அந்தளவுக்கு கருத்து மழையையும், கணிப்பு மழையையும் பொழிந்து வருகின்றனர் முன்னாள், இந்நாள் கேப்டன்கள். அந்த வகையில் லேட்டஸ்ட் வரவு தாதா கங்குலி.

Pakistan may clinch the icc world cup 2019 says sourav ganguly

ஆனால்... அவரது கணிப்பையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதற்கு அவர் கூறும் காரணத்தையும் புரிந்து கொள்ள முடியவில்லை. இருக்காதா பின்னே..! உலக கோப்பையை பாகிஸ்தான் தான் கைப்பற்றும் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியிருப்பதாவது:பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக பாகிஸ்தான் உலக கோப்பை தொடரில் நிச்சயம் சிறப்பாக விளையாடும். அதற்கு காரணமும் இருக்கிறது. 2009ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற டி 20 உலக கோப்பையில் பாகிஸ்தான் சாம்பியன்.

2017ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை போட்டியிலும் இறுதி போட்டியில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றிருக்கிறது. அது தவிர இப்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் பாகிஸ்தான் சிறப்பாக ஆடி வருகிறது. எனவே பாகிஸ்தான், இங்கிலாந்தில் சிறப்பாக விளையாடும்.

உலக கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. கோலியின் பெங்களூரு அணி ஐபிஎல்லில் தோற்றாலும் அது இந்தியாவை பாதிக்காது என்று கூறினார்.

Story first published: Wednesday, May 15, 2019, 13:57 [IST]
Other articles published on May 15, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+