Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணியை வீழ்த்தனும்னா '3 செஞ்சுரி போடனும்'- பாக். வீரர்களுக்கு மியான்டட் அட்வைஸ்!

இஸ்லாமாபாத்: இந்திய அணியை வீழ்த்த வேண்டுமானால், பாகிஸ்தான், 300க்கும் அதிக ரன் குவிக்க வேண்டியது அவசியம் என்று, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜாவீத் மியான்டட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜாவீத் மியான்டட் கூறியுள்ளதாவது: இந்தியாவில் விராட் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா, ரோகித் ஷர்மா, ஷிகர் தவான், டோணி என வலிமையான பேட்டிங் திறமையாளர்கள் உள்ளனர். எனவே இந்தியாவை வீழ்த்த வேண்டுமானால் பாகிஸ்தான் 300 அல்லது 325க்கு மேல் ரன் எடுக்க வேண்டியது அவசியம்.

Pakistan must score over 300 to beat India in World Cup: Miandad

பாகிஸ்தானின் மிஸ்பா-உல்-ஹக், யூனிஸ் கான், ஷாகித் அப்ரிடி மற்றும் அகமது சேஷாத் ஆகியோர், ஆஸ்திரேலியாவின் பிட்சுக்கு ஏற்றபடி பேட்டிங் செய்ய விரைந்து தயாராக வேண்டும். பாகிஸ்தானின் பந்து வீச்சு பலவீனமாக இருப்பதை பேட்ஸ்மேன்கள் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

இந்தியா-பாகிஸ்தான் நடுவேயான போட்டி, முதலிலேயே முடிந்துவிடுவதால், இரு அணிகளுமே டென்ஷன் இல்லாமல், பிற போட்டிகளில் கவனம் வைக்க வாய்ப்பு ஏற்படும். ஏனெனில், இவ்விரு அணிகளும் மோதும் போட்டிதான் இந்த உலக கோப்பையின் தாய் போட்டி என்று கூற முடியும்.

Story first published: Friday, January 30, 2015, 15:13 [IST]
Other articles published on Jan 30, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+