Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாகிஸ்தான் இல்லாத உலகக்கோப்பை??.. இந்தியாவுக்கு செக் வைக்கப்படுகிறதா?.. புதிய தலைவர் நஜம் சேதி பதில்

கராச்சி: 2023ம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி பங்குபெற வருமா என்பது குறித்து அந்நாட்டு வாரியத்தின் புதிய தலைவர் பேசியுள்ளார்.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிவடைந்ததை அடுத்து அனைத்து அணிகளும் அடுத்த உலகக்கோப்பைகாக தயாராகி வருகின்றனர். அதன்படி 50 ஓவர் உலகக்கோப்பை இந்தியாவில் வரும் அக்டோபரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நடைபெறும் இந்த தொடருக்கு பாகிஸ்தான் அணி வருமா என்ற கேள்வி தான் கடந்த சில நாட்களாக விவாத பொருளாக மாறியுள்ளது. இதற்கு காரணம் ஆசிய கோப்பை தொடர் தான்.

உலகக்கோப்பை பிரச்சினை

உலகக்கோப்பை பிரச்சினை

2023ம் ஆண்டின் ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. ஆனால் பிசிசிஐ செயலாளரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான ஜெய் ஷா, பாகிஸ்தானுக்கு இந்திய அணி செல்லாது எனவும், ஆசிய கோப்பை தொடரை பாகிஸ்தானில் இருந்து வேறு ஏதாவது பொது இடத்திற்கு மாற்றி செல்லப்போவதாகவும் அறிவித்தார். இதனால் இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பையில் பாகிஸ்தானும் பங்கேற்காது என அந்நாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவர் ரமீஷ் ராஜா கூறியிருந்தார்.

பாகிஸ்தானின் விளக்கம்

பாகிஸ்தானின் விளக்கம்

இந்நிலையில் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள நஜம் சேதி மாறுபட்ட கருத்தை கூறியுள்ளார். அதில், இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் உறவுகளை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இந்தியாவுக்கு சென்று உலகக்கோப்பையில் விளையாட வேண்டுமா? இல்லையா என்பது குறித்து பாகிஸ்தானின் அரசு தான் முடிவெடுக்கப்போகிறது. கிரிக்கெட் வாரியம் எந்த முடிவையும் எடுக்கப்போவதில்லை.

ஆசியக்கோப்பை கவுன்சில்

ஆசியக்கோப்பை கவுன்சில்

அரசு அதிகாரங்கள் மூலமாக மட்டுமே இதற்கான முடிவுகள் நேரடியாக எடுக்கப்படும். ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்திக்கொண்டே தான் வருகிறேன். பாகிஸ்தான் எந்த வகையிலும் ஒதுக்கப்படவில்லை என்பதை உறுதி செய்வது போன்று தான் முடிவுகள் இருக்கும் என நஜம் சேதி கூறியுள்ளார்.

13 ஆண்டு காத்திருப்பு

13 ஆண்டு காத்திருப்பு

ஒருவேளை ஆசியக்கோப்பை தொடருக்காக பாகிஸ்தானுக்கு இந்தியா சென்றால், 13 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக நடக்கும். 2008ம் ஆண்டு கடைசியாக ஆசிய கோப்பை தொடரில் கடைசியாக மோதினர். இதே போல பாகிஸ்தான் கடைசியாக கடந்த 2012ம் ஆண்டு இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, December 27, 2022, 18:27 [IST]
Other articles published on Dec 27, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+