ஆப்கனை வீழ்த்திய பின் ஆபாச செய்கை காட்டிய பாகிஸ்தான் செய்தியாளர்.. வைரலாகும் வீடியோ
இஸ்லாமாபாத் : ஆசிய கோப்பை போட்டியில் தன் முதல் ஆட்டத்தில் ஆப்கன் அணியை வீழ்த்தியது பாகிஸ்தான்.
ஒரு பாகிஸ்தான் செய்தி தொலைக்காட்சியில், அந்த செய்தியை வாசிக்கும் முன்பு கேமரா ஓடிக் கொண்டு இருப்பதை அறியாத செய்தியாளர் ஆபாச செய்கை செய்து கொண்டு இருந்தார்.
பின் செய்தி ஒளிபரப்பு தொடங்கியது என்பதை அறிந்த அவர் உடனடியாக பாகிஸ்தான் வெற்றி பெற்ற செய்தியை வாசித்தார். இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
பலர் எதிர்ப்பு
இந்த சம்பவம் பலரின் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. அந்த செய்தி வாசிப்பாளர் அருகில் மற்றொரு பெண் செய்தியாளர் அமர்ந்து இவரின் ஆபாச செய்கையை கண்டு சிரித்துக் கொண்டு இருந்ததும் சேர்த்து பலரை எரிச்சலடைய வைத்துள்ளது

ஆப்கனை வீழ்த்திய கொண்டாட்டம்
இதில் சிலர், ஆப்கன் அணியை பாகிஸ்தான் அணி வென்றதை தான் அப்படி ஆபாச செய்கை காட்டி கொண்டாடினார் என கூறியுள்ளனர். பாகிஸ்தான் கடைசி ஓவரில் தான் அந்த போட்டியில் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

வெறுப்புணர்வை காட்டும் செய்கையா?
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானின் அண்டை நாடு. இரண்டு நாடுகளுக்கும் இடையே பல பிரச்சனைகள் உள்ளது. அந்த வெறுப்புணர்வில் தான் அந்த செய்தியாளர் இப்படி நடந்து கொண்டார் எனவும் சிலர் கூறி இருக்கின்றனர். ஒரு சிலர், இது மீடியாவின் மோசமான நிலையை குறிப்பதாகவும் கூறி இருக்கின்றனர்.

பாகிஸ்தான் நிலைமை மோசம்
பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை இன்றைய வங்கதேச அணிக்கெதிரான சூப்பர் 4 போட்டி மிக முக்கியமானதாகும். இந்த போட்டியில் வென்றால் அந்த அணி இறுதிக்கு முன்னேறும். பாகிஸ்தான் அணி தோல்வி பயத்தில் இருப்பதாக அந்த அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications