Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்போது வரைக்கும் நான் தான் பாகிஸ்தான் கேப்டன்.. ஷாகின் அப்ரிடி பரபர கருத்து

லாகூர்: பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷாஹீன் ஷா அப்ரிடியிடம், அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை வரை அவர் கேப்டனாக நீடிப்பாரா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, "தற்போதைக்கு, நான் தான் கேப்டன்" என்று அவர் சுருக்கமாக பதிலளித்துள்ளார்.

பாகிஸ்தான் அணியின் தலைமைப் பொறுப்பில் மீண்டும் மாற்றங்கள் செய்யப்படலாம் என்ற யூகங்கள் எழுந்துள்ள நிலையில் அப்ரிடியின் இந்த கருத்து வெளியாகியுள்ளது. முன்னாள் கேப்டன் பாபர் அசாம் மீண்டும் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளுக்கும் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Shaheen afridi Babar azam

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அண்மைக்காலமாக அடிக்கடி கேப்டன்களை மாற்றி வரும் நிலையில், ஒருநாள் போட்டி கேப்டனாக நியமிக்கப்பட்ட அப்ரிடியின் பதவிக்காலம் தற்போது விவாதத்திற்குரியதாக மாறியுள்ளது.

IND vs SL: இந்த 28 வயது வீரர் தான் இலங்கைக்கு ஆபத்தாக விளங்குவார்- மஹாரூஃப் கருத்து</a><a class=" width="200" height="113">

IND vs SL: இந்த 28 வயது வீரர் தான் இலங்கைக்கு ஆபத்தாக விளங்குவார்- மஹாரூஃப் கருத்து

தேசிய சாம்பியன்ஸ் கோப்பை அணிகளின் கேப்டன்களுடன் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அப்ரிடி பங்கேற்றார். அப்போது, 2027 உலகக் கோப்பை வரை அவரே கேப்டனாக நீடிப்பார் என்பதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

தனது கேப்டன் பதவி குறித்த நிச்சயமற்ற தன்மையைப் பற்றி கவலைப்படாமல், ஆகஸ்ட் 11 முதல் 18 வரை நடைபெற உள்ள தேசிய சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் மீது அப்ரிடி தனது கவனத்தைத் திருப்பியுள்ளார். இத்தொடரில் பாகிஸ்தானின் முன்னணி உள்நாட்டு வீரர்கள் விளையாட உள்ளனர்.

உலகக் கோப்பை போட்டிக்கு முன்னதாக பாகிஸ்தான் அணிக்குத் தேவையான பலமான மாற்று வீரர்களை உருவாக்க இந்தத் தொடர் முக்கியப் பங்கு வகிக்கும் என்று ஆப்ரிடி கூறினார்."நாம் உலகக் கோப்பைக்குச் செல்லும் போதெல்லாம், பல காயப் பிரச்சனைகளை எதிர்கொள்கிறோம். உலகக் கோப்பைக்கு முன்னதாக வீரர்களுக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டால், நமக்கு மாற்று வீரர்கள் தயாராக இருப்பார்கள். இந்த உள்நாட்டுத் தொடரின் மூலம் சிறந்த மாற்று வீரர்களைக் கண்டறிவது எளிதாக இருக்கும்" என்று அப்ரிடி கூறினார்.

"இந்தத் தொடர் அனைத்து வீரர்களுக்கும் அவரவர் தகுதிக்கேற்ப தங்களை நிரூபிக்க ஒரு நல்ல வாய்ப்பை வழங்கும். அனைத்து வீரர்களும் தங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பார்கள். நான் ஏற்கனவே கூறியது போல், எங்கள் கவனம் உலகக் கோப்பை மீதுதான் உள்ளது. தனிப்பட்ட செயல்பாடுகளுடன், மற்ற வீரர்களின் தற்போதைய ஃபார்ம் மற்றும் உடற்தகுதியும் மதிப்பீடு செய்யப்படும்" என்று அவர் கூறினார்.

தொலைக்காட்சியில் அறிமுகமாகிறார் ரோகித் சர்மா.. ஓய்வு பேச்சுக்கு நடுவில் ஷோ நடத்துகிறார்

Also Read

தொலைக்காட்சியில் அறிமுகமாகிறார் ரோகித் சர்மா.. ஓய்வு பேச்சுக்கு நடுவில் ஷோ நடத்துகிறார்

முகமது ரிஸ்வானுக்குப் பதிலாக, அப்ரிடி பாகிஸ்தானின் ஒருநாள் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இருப்பினும், பாகிஸ்தான் அணியின் தலைமைப் பொறுப்பில் இன்னும் ஒரு தெளிவான முடிவு எட்டப்படவில்லை. பாபர் அசாம் மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்கக்கூடும் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன.

Story first published: Tuesday, August 11, 2026, 19:28 [IST]
Other articles published on Aug 11, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+