Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முழங்கையில் காயம்… உலக கோப்பையில் விளையாடுவாரா இமாம்…? அதிர்ச்சியில் பாகிஸ்தான்

நாட்டிங்ஹாம்:இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் தொடக்க வீரர் இமாம்-உல்-ஹக்கிற்கு காயம் ஏற்பட்டதால் உலக கோப்பை தொடரில் அவர் கலந்து கொள்வதில் சிக்கல் எழுந்துள்ளது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான 4வது ஒரு நாள் போட்டி நாட்டிங்காம் மைதானத்தில் நடைபெற்றது.

Pakistan opener imam ul haq injured against england match, pcb worries

இங்கிலாந்து அணியின் கேப்டன் மார்கனுக்கு விளையாட தடை விதிக்கப்பட்டு உள்ளதால் கேப்டன் பொறுப்பை பட்லர் ஏற்றார். டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்தார். பாகிஸ்தான் அணியில் இமாம்-உல்-ஹக், ஜமான் தொடக்க வீரர்களாக களமிறங்கினார்கள்.

போட்டியின் 4வது ஓவரில் மார்க் உட் வீசிய பந்து இமாம்-உல்-ஹக்கின் முழங்கையை பதம் பார்த்தது. வலியால் துடித்த இமாம், பேட்டை தூக்கி எறிந்தபடியே, துடிதுடித்து கீழே விழுந்தார். களத்தில் இருந்த வீரர்கள் அதிர்ச்சியில் நிற்க, அவருக்கு உடனடியாக முதல் உதவி சிகிச்சை அளிக்கப் பட்டது.

இமாம்-உல்-ஹக் தொடர்ந்து வலியால் துடித்ததால் அவர் போட்டியிலிருந்து வெளியேறினார். அவருக்கு எலும்பு முறிவு ஏதும் ஏற்பட்டுள்ளதா என்று எக்ஸ்ரே முடிவில் தான் தெரிய வரும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. அதன் படி முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் கையில் வீக்கம் இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

அடுத்த கட்ட சோதனைகளுக்கு பிறகே என்ன நிலைமை என்று கூறமுடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. உலக கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இமாம்-உல்-ஹக் இடம் பெற்றிருக்கிறார். தற்போதைய காயத்தால் அவர் உலக கோப்பையில் அவர் பங்கேற்பரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி போட்டியில் இமாம் 151 ரன்கள் விளாசி இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

Story first published: Saturday, May 18, 2019, 13:53 [IST]
Other articles published on May 18, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+