Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதல் இரட்டை சதம்..... முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள்... ஒரே நாளில் ஜமான் அதிரடி சாதனைகள்!

Recommended Video

ஒரே நாளில் ஜமான் அதிரடி சாதனைகள்!- வீடியோ

புலவாயோ: ஜிம்பாப்வேக்கு எதிரான நான்காவது ஒருதினப் போட்டியின்போது, முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் குவித்த சாதனையை பாகிஸ்தானின் பகர் ஜமான் மற்றும் இமாம் உல் ஹக் புரிந்தனர். இதைத் தவிர பாகிஸ்தானுக்கு முதல் இரட்டை சதம் என பல சாதனையை முறியடித்தார் ஜமான்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 5 போட்டிகள் கொண்ட ஒருதினப் போட்டித் தொடரில் 3-0 என பாகிஸ்தான் வென்றுள்ளது. இந்த நிலையில் நான்காவது ஒருதினப் போட்டி தற்போது நடந்து வருகிறது. இதில் பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது

துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பகர் ஜமான் மற்றும் இமாம் உல் ஹக் முதல் பாலில் இருந்தே அதிரடி காட்டினர். இருவரும் இணைந்து, 41.6 ஓவர்களில் 304 ரன்கள் குவித்தனர். 122 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 113 ரன்கள் குவித்த நிலையில் இமாம் உல் ஹக் ஆட்டமிழந்தார்.

இதன் மூலம் முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் குவித்த சாதனையை முறியடித்தனர். இலங்கையின் சனத் ஜெயசூர்யா, உபல் துரங்கா 286 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்தது.

பாக் 399 ரன்கள்

பாக் 399 ரன்கள்

ஆட்ட நேர இறுதியில் பாகிஸ்தான் 50 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் குவித்தது. ஜமான் 156 பந்துகளில் 24 பவுண்டரிகள், 5 சிக்சர்களுடன் 210 ரன்கள் குவித்தார். ஆசிப் அலி 22 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார்.

ஜமான் சாதனை

ஜமான் சாதனை

இதன் மூலம் ஒருதினப் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை ஜமான் பெற்றார். இரட்டை சதம் அடித்த 6வது வீரரானார்.

மூன்று இந்தியர்கள்

மூன்று இந்தியர்கள்

ரோஹித் சர்மா மூன்று முறை இரட்டை சதம் அடித்துள்ளார். மார்ட்டின் குப்தில், வீரேந்திர சேவாக், கிறிஸ் கெயில், சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் இரட்டை சதம் அடித்துள்ளனர்.

மற்றொரு சாதனை

மற்றொரு சாதனை

ஒருதினப் போட்டிகளில் பாகிஸ்தான் எடுத்துள்ள அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். ஜிம்பாப்வேயில் அடிக்கப்பட்டுள்ள அதிகபட்ச ஸ்கோரும் இதுதான்.

Story first published: Friday, July 20, 2018, 17:05 [IST]
Other articles published on Jul 20, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+