Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவை வம்பிழுக்கும் பாகிஸ்தான்.. ஜெய்ஷாவை எரிச்சல் அடைய செய்த முடிவு.. இது கொஞ்சம ஓவர் தான்

லாகூர் : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை அண்மையில் வெளியிடப்பட்டது. இதில் அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது.

இந்த தொடரின் பாகிஸ்தான் பங்கேற்பதாக முதலில் அறிவித்தது. இதனால் பாகிஸ்தான் விளையாடும் போட்டிகளையும் சேர்த்து தான் அட்டவணை அறிவிக்கப்பட்டது.

Pakistan Planing to sent their security team ahead of icc world cup 2023

அதன்படி பாகிஸ்தான் தங்களுடைய போட்டிகளை ஹைதராபாத், சென்னை, கொல்கத்தா, பெங்களூர் மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் விளையாடுகின்றனர். இந்த நிலையில் இந்தியா வந்து விளையாடுவதில் ஒரு சிக்கல் இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. எங்களுடைய அணி வீரர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக தான் உள்ளது என்றும் இதனால் அரசு அறிவித்த பிறகு தான் நாங்கள் இந்தியா வருவோம் என்றும் தெரிவித்திருந்தது.

இதன் ஒரு படியாக தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எடுத்த முடிவு இந்தியாவை கடுப்படைய வைத்திருக்கிறது. தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தங்கள் நாட்டின் வீரர்களின் நிலை இந்தியாவில் எப்படி இருக்கும் என்பதை ஆராய ஒரு குழுவை அனுப்ப உள்ளது. அதன்படி இந்த குழு இந்தியாவுக்கு வந்து பாகிஸ்தான் வீரர்களுக்கு எந்த பாதுகாப்பு செய்யப்பட்டிருக்கிறது.

பாகிஸ்தான் வீரர்களுக்கு நிலவும் ஆபத்து என்ன அதனை தடுக்க வழிமுறைகள் என்ன பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிரான மனநிலை ரசிகர்களிடம் எப்படி இருக்கிறது? உள்ளிட்ட கருத்துக்களை ஆராயும் மேலும் போலீசாரிடம் எந்த அளவுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறித்தும் கேள்வி கேட்கப்படும். இந்த தகவலை எல்லாம் அந்த குழு சேகரித்து ஒரு அறிக்கையாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் வழங்கும்.

இந்த அறிக்கையின் பெயரில் பாகிஸ்தான் அரசு வீரர்களை இந்தியாவுக்கு அனுப்பலாமா வேண்டாமா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கும் என தெரிகிறது. இந்தியாவில் பாதுகாப்புக்கு பிரச்சனை இல்லை என்ற சூழல் நிலவி வரும் நிலையில் இந்தியாவின் இமேஜை கெடுக்கும் விதமாக பாகிஸ்தான் இவ்வாறு செயல்படுவதாக சிலர் குற்றம் சாட்டி இருக்கிறார்கள். பாகிஸ்தானின் இந்த சேட்டை பிசிசிஐ கருப்பாக்கி இருக்கிறது.

Story first published: Sunday, July 2, 2023, 10:11 [IST]
Other articles published on Jul 2, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+