Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"இந்தியாவிடம் தோற்றது இன்னும் வலிக்கிறது.. வீழ்த்திவிடலாம் என்று..".. குமுறிய பாகிஸ்தான் வீரர் ஹசன்

லாகூர்: 2026 ஆசிய விளையாட்டுப் போட்டி கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்தியாவிடம் அடைந்த தோல்வி இன்னும் தன்னை வாட்டி வதைப்பதாக பாகிஸ்தான் அதிரடி ஆட்டக்காரர் ஹசன் நவாஸ் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் சமீபத்தில் நடைபெற்ற 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஆண்கள் கிரிக்கெட் இறுதிப் போட்டியில், பாகிஸ்தானை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் குவித்தது.

Pakistan Player Hasan Nawaz Expresses Regret Over Defeat Against India In Asian Games Cricket Final

கடினமான இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணியில், நடுவரிசையில் களமிறங்கிய ஹசன் நவாஸ் இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்தார். இவர் வெறும் 51 பந்துகளில் 96 ரன்கள் விளாசி கடைசி வரை அச்சுறுத்தினார். எனினும் பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.

இந்தத் தோல்வி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஹசன் நவாஸ் தனது மனக் குமுறலை கொட்டி இருக்கிறார். "இறுதிப் போட்டியில் தங்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது இன்னும் எனக்கு மிகுந்த வேதனையைத் தருகிறது. தனிப்பட்ட முறையில் எனது 96 ரன்கள் திருப்தி அளித்தாலும், போட்டியை வெல்ல முடியாமல் போனது ஏமாற்றமே. நாங்கள் செய்த சில சிறிய தவறுகளுக்குப் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியதாகிவிட்டது.

இந்திய அணியை வீழ்த்தி விடலாம் என்றே நினைத்தேன். ஜஸ்பிரித் பும்ராவுக்கு இன்னும் ஒரு ஓவர் மட்டுமே மீதமிருந்தது. இந்திய அணியில் ஓவர்கள் வீச ஒரு பந்துவீச்சாளர் பற்றாக்குறையுடன் இருந்ததால், சேஸிங்கில் சரியாக திட்டமிட்டே ஆடினேன். ஆனால் கடைசி கட்டத்தில் செய்த தவறுகளால் வெற்றி கைநழுவிப் போனது.

“அரசு வேலை தரேன்னு சொன்னாங்க”.. உலகக்கோப்பை வென்றும் தவிக்கும் பார்வையற்றோர் கிரிக்கெட் வீராங்கனைகள்

“அரசு வேலை தரேன்னு சொன்னாங்க”.. உலகக்கோப்பை வென்றும் தவிக்கும் பார்வையற்றோர் கிரிக்கெட் வீராங்கனைகள்

2024 டி20 உலகக்கோப்பைக்குப் பிறகு இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தொடர்ந்து 6-0 என்ற கணக்கில் பின்னடைவை சந்தித்துள்ளது. இந்தியா போன்ற பலம் வாய்ந்த அணியை வீழ்த்த வேண்டுமென்றால், செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு எங்களை நாங்கள் திருத்திக் கொள்ள வேண்டும்" என்று ஹசன் நவாஸ் தெரிவித்தார்.

Story first published: Thursday, October 8, 2026, 6:58 [IST]
Other articles published on Oct 8, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+