Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்படி நம்ப வச்சு ஏமாத்திட்டீங்க..ஏன்? கறுப்பு பிளாஸ்திரியை வாயில் ஒட்டி எதிர்த்த கிரிக்கெட் வீரர்

இஸ்லாமாபாத்: உலக கோப்பை அணியில் முதலில் சேர்த்துவிட்டு, பின்னர் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் வீரர் ஜூனைத் கான், நூதன முறையில் போராட்டத்தில் இறங்கியதால் பரபரப்பு நிலவியது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 30ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் லீக் போட்டி உட்பட மொத்தம் 46 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

வீரர்களின் பட்டியலில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய விரும்பினால், வரும் 23ம் தேதிக்குள் மாற்றங்கள் செய்து,இறுதி பட்டியலை ஐசிசியிடம் சமர்பிக்க வேண்டும். இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தங்கள் அணி வீரர்களின் பட்டியலில் சில மாற்றங்களை செய்துள்ளது.

வீரர்கள் மாற்றம்

வீரர்கள் மாற்றம்

முதலில் அறிவிக்கப்பட்ட அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜூனைத் கான் இடம் பிடித்திருந்தார். இதனை அடுத்து பாகிஸ்தான் அணியில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அபிட் அலி, ஜூனைத் கான், பஹீம் அஷ்ரப் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதில் முகமது அமிர், வஹாப் ரியாஸ், ஆசிப் அலி ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

கடுமையான எதிர்ப்பு

கடுமையான எதிர்ப்பு

பாகிஸ்தான் தேர்வு குழு செய்த இந்த அதிரடி மாற்றம் வேகப்பந்து வீச்சாளர் ஜூனைத் கானை கடுமையாக கோபமடைய செய்திருக்கிறது. அதற்கு அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதை அவர் வெளிப்படுத்திய விதம் தான் தற்போதைய கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

வாயில் பிளாஸ்திரி

வாயில் பிளாஸ்திரி

அதாவது, தனது வாயை பிளாஸ்திரியால் ஒட்டி, (அதுவும் கறுப்பு நிற பிளாஸ்திரியால்) புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். அதில், அவர் கூறியிருப்பதாவது: நான் எதையும் சொல்வதற்கு விரும்பவில்லை. உண்மை எப்போதும் கசக்க தான் செய்யும் என்று கூறியுள்ளார்.

உடனடி நீக்கம்

உடனடி நீக்கம்

அவரின் இந்த கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் என கலவையான விமர்சனங்கள் வருவதால் அந்த பதிவை ஜூனைத் கான் உடனடியாக நீக்கிவிட்டார். அவர் இந்த எதிர்ப்பை வெளிப் படுத்தியதற்கு ஒரு முக்கிய காரணத்தை கிரிக்கெட் வல்லுநர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

கடும் கோபம் ஏன்?

கடும் கோபம் ஏன்?

அதாவது, ஜுனைத் கானுக்கு பதிலாக சேர்க்கப்பட்ட வஹாப் ரியாஸ் 2 ஆண்டுகளாக ஒரு நாள் போட்டிகளில் விளையாடியதில்லை. அதனை முன் வைத்து தான் ஜூனைத் கான் கோபம் அடைந்திருக்கிறார் என்று அவர்கள் கூறி இருக்கின்றனர்.

Story first published: Tuesday, May 21, 2019, 13:48 [IST]
Other articles published on May 21, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+