Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பேட்டைப் பிடிச்சு வெளுக்கவும் தெரியும்.. பிரஷ்ஷை எடுத்து வரையவும் முடியும்.. அசத்துறீங்களே!

கராச்சி: கைநாட் இம்தியாஸ்.. இவர் பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியில் ஆல் ரவுடண்டராக வலம் வருபவர். லாக் டவுன் சமயத்தில் சோர்ந்து போய் விடாமல் தனது கை வந்த கலையை கையில் எடுத்துக் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

Recommended Video

IPL 2020 : 5 incidents that changed IPL history

கராச்சியில் பிறந்தவரான கைநாட் ஆல் ரவுண்டர் ஆவார். வலது கை பேட்ஸ்வுமன் மட்டுமல்லாமல் வேகப் பந்து வீச்சாளரும் கூட. இவரும் தற்போது லாக்டவுனால் வீட்டிலேயே இருக்க நேரிட்டுள்ளது.

ஆனாலும் சோர்ந்து போகவில்லை கைநாட். மாறாக தனக்குப் பிடித்தமான டிராயிங்கை கையில் எடுத்துள்ளார். படமாக வரைந்து தள்ளிக் கொண்டுள்ளார். அதை இன்ஸ்டாகிராமிலும் போட்டுத் தள்ளுகிறார்.

இதுதான் பொழுது போக்கு

இதுதான் பொழுது போக்கு

வீட்டிலேயே உடற்பயிற்சி செய்வது, செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவது என்று ஒன்று பாக்கி இல்லாமல் எல்லாவற்றையும் செய்து தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்கிறார். அவ்வப்போது டிராயிங்கையும் கையில் எடுக்கிறார். வீட்டுப் படிக்கட்டுகளில் ஏறி இறங்கி ஓடுவது. புக் படிப்பது என எல்லாவற்றையும் ஒன்று விடாமல் செய்கிறார் கைநாட்.

சமையலும் டிராயிங்கும்

சமையலையும் ஒரு கை பார்க்கிறார். தான் சமைத்தது குறித்து போஸ்ட் போட்டு எப்படி இருக்கு சொல்லுங்கன்னும் கேட்கிறார். இப்போது புதிதாக ஒரு டிராயிங் வரைந்துள்ளார். அதுதான் ஹைலைட். சும்மா சொல்லக் கூடாதுங்க. சூப்பராக வரைந்திருக்கிறார் கைநாட். அவர் வரைந்திருப்பது ஒரு சிங்கம். ஆண் சிங்கமா பெண் சிங்கமா என்று தெரியவில்லை.

புதிய பொழுதுபோக்கு

புதிய பொழுதுபோக்கு

எனது புதிய பொழுது போக்கு இது. எப்படி இருக்குன்னு சொல்லுங்க. நல்லா இருக்கா இல்லையா.. வெளிப்படையா சொல்லுங்க.. 2 பக்கம் வரைஞ்சிருக்கேன். நேர்மையா கருத்து சொல்லுங்கப்பா என்று கேட்டுள்ளார் கைநாட். மேலும் அனைவரும் வீட்டிலேயே இருங்க. வெளியில் போகாதீங்க. பாதுகாப்பா தங்கியிருங்க என்றும் ரசிகர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

ரசிகரின் ஓவியம் இது

சமீபத்தில்தான் கைநாட்டை அவரது ரசிகர் ஒருவர் அழகாக படம் வரைந்து அனுப்பியிருந்தார். அதைப் பார்த்து அசந்து போன கைநாட் அந்தப் படத்தைப் போட்டு எனது ரசிகர் வரைந்த ஓவியம் என்று பெருமையுடன் அதை ஷேர் செய்து இன்ஸ்டாவில் போட்டிருந்தார். தற்போது இவரே பிரஷ்ஷை எடுத்து வரைய ஆரம்பித்து விட்டார்.. எப்படியோ பொழுது போனா சரிதான் என்ன சொல்றீங்க.

Story first published: Friday, April 17, 2020, 15:42 [IST]
Other articles published on Apr 17, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+