Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“என்னையா வீட்டுக்கு அனுப்புனீங்க”.. பாகிஸ்தான் அமைச்சருக்கு பேட்டால் பதிலடி கொடுத்த சல்மான் ஆகா!

ராவல்பிண்டி: பாகிஸ்தான் அணியில் கேப்டன் பதவி பறிக்கப்பட்டு, இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பாதியில் வீட்டுக்கு அனுப்பப்பட்ட சல்மான் அலி ஆகா, இலங்கை அணிக்கு எதிராக இமாலய சதம் விளாசி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரும், அமைச்சருமான மோஷின் நக்விக்கு தனது பேட்டால் பதிலடி கொடுத்துள்ளார். ராவல்பிண்டியில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரின் தொடக்க ஆட்டத்தில், சல்மான் ஆகா 90 பந்துகளில் 107 ரன்கள் குவித்து அசத்தினார். பேட்டிங்கில் திணறிய பாகிஸ்தான் அணியை தனது ஆட்டத்தால் 305 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை எட்ட வைத்தார்.

கடந்த 3 மாதங்களாக பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்தால் சல்மான் ஆகா கடும் அவமானங்களைச் சந்தித்தார். ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் கேப்டனாக வழிநடத்தியவரை, 3-வது போட்டிக்கு முன்பாக எந்தக் காரணமும் இன்றி அவசரமாக நாட்டுக்குத் திருப்பி அனுப்பினர். பின்னர் அவரது டி20 கேப்டன் பதவியும் பறிக்கப்பட்டு சாஹிப்சாதா ஃபர்ஹானிடம் வழங்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சல்மான், உள்நாட்டு கிரிக்கெட்டில் ஒரு முச்சதம் மற்றும் 145 ரன்கள் விளாசி தனது கொந்தளிப்பை ரன்களாக வெளிப்படுத்தினார்.

Pakistan Player Salman Agha Smashes Century Against Sri Lanka in tri-series after Being Stripped of Captaincy

அடுத்து பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் இடம் பெற்றார். பாகிஸ்தான் - இலங்கை அணிகள் இந்த தொடரின் முதல் போட்டியில் மோதின. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். சைம் அயூப் 7 ரன்னிலும், ஃபகர் ஜமான் 16 ரன்னிலும் வெளியேறினர். பாபர் அசாம் 45 ரன்களிலும், அறிமுக வீரர் சாத் பெய்க் 39 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இந்த இக்கட்டான நேரத்தில் 4-வது வரிசையில் களமிறங்கிய சல்மான் ஆகா, இலங்கை பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். ஹசன் நவாஸுடன் 5-வது விக்கெட்டுக்கு 97 ரன்களும், அராபத் மின்ஹாஸுடன் 64 ரன்களும் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை சரிவிலிருந்து மீட்டார். வேகப்பந்து வீச்சாளர் அசிதா பெர்னாண்டோ பந்தில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விளாசி சதம் கடந்த சல்மான் ஆகா, 47-வது ஓவரில் ஆட்டமிழந்தார்.

"200 ஸ்ட்ரைக் ரேட்டில் எல்லா மேட்ச்லயும் ரன்..".. அபிஷேக் சர்மா குறித்து ஆகாஷ் சோப்ரா பேச்சு

2025-ம் ஆண்டு தொடக்கம் முதல் இதுவரை 4 ஒருநாள் சதங்களை விளாசிய ஒரே பாகிஸ்தான் பேட்டர் என்ற அசாத்திய சாதனையும் படைத்தார். இறுதியில் பாகிஸ்தான் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 305 ரன்கள் குவித்தது. இலங்கை அணியில் இஷான் மலிங்கா 46 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தன்னை அவமதித்தவர்களுக்கு சல்மான் ஆகா தனது பேட் மூலமாகவே தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

Story first published: Sunday, October 18, 2026, 18:38 [IST]
Other articles published on Oct 18, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+