Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாக். கிரிக்கெட் வீரர் இறந்து போனதாக தீயாக பரவிய வதந்தி.. வீடியோ வெளியிட்டு விளக்கம்!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மல் இறந்து போனதாக கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வந்தது. அவர் கார் விபத்தில் மரணம் அடைந்துவிட்டதாக கூறப்பட்டது.

மேலும் அவரது மரணம் விபத்து அல்ல கொலை என்றும் கூட நிறைய செய்திகள் வெளியானது. இதற்காக நிறைய போட்டோ ஆதாரங்கள் வெளியானது.

தற்போது இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உமர் அக்மல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கலவரம்

கலவரம்

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கடந்த சில நாட்களாக பெரிய கலவரம் நடந்து வருகிறது. அரசுக்கு எதிராக கிளர்ச்சி இயக்கங்கள் போராட்டம் நடத்தி வருகிறது. முதலில் போலீஸ் இந்த போராட்டத்தை அடக்க முயற்சி செய்தது. பின் ராணுவம் கொண்டு வரப்பட்டது. இந்த கலவரத்தில் 10க்கும் அதிகமானோர் மரணம் அடைந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

உமர் அக்மல் மரணம்

உமர் அக்மல் மரணம்

இந்த நிலையில் இந்த கலவரத்தில் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் உமர் அக்மல் மரணம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகியது. அங்கு நடந்த கலவரத்திற்கு ஆதரவாக உமர் சென்றதாகவும், அப்போது அவர் மரணம் அடைந்ததாகவும் கூறப்பட்டது. மேலும் அவர் காரில் இருக்கும் போது வேகமாக வந்த ராணுவ வாகனம் அதில் மோதி அதன் காரணமாக மரணம் அடைந்துவிட்டதாக கூறப்பட்டது.

சோஷியல் மீடியா வைரல்

இந்த மரணம் குறித்த செய்தி வெளியே வந்ததும் அது சோஷியல் மீடியா முழுக்க வைரல் ஆனது. பாகிஸ்தானில் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் மற்ற நாட்டில் இருந்தும் உமர் அக்மல் குறித்து விசாரிக்க ஆரம்பித்தனர். பாகிஸ்தானில் இருக்கும் பிரபலங்களை டிவிட்டரில் டேக் செய்து உமர் அக்மல் குறித்து பலரும் விசாரித்தனர்.

உமர் வீடியோ

இதையடுத்து அதிசயமாக டிவிட்டரில் உமர் அக்மல் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் ''நான் மிகவும் நலமாக இருக்கிறேன். எனக்கு எதுவுமே ஆகவில்லை. நான் மரணம் அடைந்ததாக சோஷியல் மீடியாவில் வந்த செய்திகள் அனைத்தும் வதந்தி. பாகிஸ்தான் தேசிய டி-20 தொடரின் செமி பைனலுக்கு கண்டிப்பாக வருவேன்'' என்று கூறினார். இதன் மூலம் இரண்டு நாளாக பரவி வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.

Story first published: Thursday, November 30, 2017, 9:56 [IST]
Other articles published on Nov 30, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+