For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஜிம்பாப்வேக்கு எதிராக பாக். வீரர்கள் ஏமாற்று வேலை..விதியை மீறியது அம்பலம்..நடவடிக்கை எடுக்குமா ஐசிசி

பெர்த்: டி20 உலககோப்பையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக பாகிஸ்தான் வீரர்கள் ஏமாற்று வேலையில் ஈடுபடுவது அம்பலமாகி உள்ளது.

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தின் போது நடுவர்கள் செய்த தவறால் தான் தோற்றுவிட்டோம் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கூறி வந்தனர்.

அந்த ஆட்டத்தில் கூட பாகிஸ்தான் வீரர்கள் பந்தில் விதிகளுக்கு மீறி எச்சில் தடவி பந்துவீசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் இது குறித்து ஐசிசி கண்டுக்கொள்ளவில்லை.

தோனி சொன்னது அப்படியே நடக்குதே.. டி20 உலகக்கோப்பை இந்த முறை இந்தியாவுக்கு தானா??.. 2 ஆதாரங்கள் இதோ!! தோனி சொன்னது அப்படியே நடக்குதே.. டி20 உலகக்கோப்பை இந்த முறை இந்தியாவுக்கு தானா??.. 2 ஆதாரங்கள் இதோ!!

பாக். செய்த தவறு

பாக். செய்த தவறு

இந்த நிலையில், நேற்றைய ஆட்டத்தில் கடைசி பந்தில் பாகிஸ்தான் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ஷாகின் ஆப்ரிடி கடைசி பந்தை எதிர்கொண்டார். அப்போது ஜிம்பாப்வே வீரர் பந்துவீசுவதற்கு முன்பே , அங்கு (NON STRIKER) நின்று கொண்டிருந்த வசீம் , கிரீஸை விட்டு பாதி வெளியேறிவிட்டார். இது, ஐசிசியின் புதிய விதிகளின் படி தவறாகும்.

பாதகம்

பாதகம்

வெற்றிக்கு 3 ரன்கள் என தேவைப்படும் போது, பந்துவீசுவதற்கு முன்பே பேட்ஸ்மேன்கள் ஓடினால், அது பந்தவீசும் அணிக்கு தான் பாதகத்தை ஏற்படுத்தும். ஆனால், பாகிஸ்தான் வீரர்கள் இப்படி செய்தும் ரன் அவுட்டனது தனி கதை. பாகிஸ்தான் வீரர்கள் இதே தவறை இந்தியாவுக்கு எதிரான போட்டியிலும் செய்தனர்.

பிராட் ஹாக் கோரிக்கை

பிராட் ஹாக் கோரிக்கை

ஆனால், இந்தியா தான் ரன் அவுட் செய்யாமல் விட்டது. தற்போது மீண்டும் ஜிம்பாப்வேக்கு எதிராக பாகிஸ்தான் வீரர்கள் செய்து கையும் களவுமாக சிக்கி கொண்டனர். இந்த நிலையில், இந்த புகைப்படத்தை பதிவிட்டு கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய விரர் பிராட் ஹக், பேட்ஸ்மேன்கள் இப்படி செய்வது பெரும் குற்றம். இதனால் பந்துவீசும் அணிக்கு தான் ஆபத்து. இதனை தடுக்க ஐசிசி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

5 ரன் பெனால்டி தேவை

5 ரன் பெனால்டி தேவை

இதனிடையே, பேட்ஸ்மேன்கள் பந்துவீசுவதற்கு முன்பு கிரீஸை விட்டு வெளியேறினால் ரன் அவுட் செய்யலாம் என்ற விதி மட்டும் போதாது என்று குறிப்பிட்டுள்ள ரசிகர்கள், 5 ரன்கள் பெனால்டி போன்ற விதியை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். நடப்பு டி20 உலககோப்பையில் இதுவரை எந்த வீரரும் அப்படி ரன் அவுட் செய்யப்படவில்லை. ஆனால், ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் மட்டும் 2 முறை வீரர்களுக்கு எச்சரிக்கை கொடுத்தது உடன் நிறுத்தி கொண்டு இருக்கிறார்.

Story first published: Friday, October 28, 2022, 14:07 [IST]
Other articles published on Oct 28, 2022
English summary
Pakistan Player wasim leaving the crease for the last ball creates controversy
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X