ஸ்கூல் வீரர்களை விட மோசம்.. மொத்தமாக டீமையே தூக்குங்கள்.. விளாசி தள்ளிய மூத்த வீரர்.. பரபரப்பு!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் ஸ்கூல் அணியை போல மோசமாக ஆடுகிறார்கள் என்று முன்னாள் வீரர் அக்தர் விளாசி உள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மிக மோசமாக ஆடி, தொடரை 0-2 என்று கணக்கில் பாகிஸ்தான் இழந்துள்ளது. அதிலும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் இன்னிங்ஸ் தோல்வி அடைந்துள்ளது.
பாகிஸ்தான் இந்த டெஸ்ட் தொடரில் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என்று அனைத்திலும் மோசமாக ஆடியது. பாகிஸ்தான் அணியை சரியாக வழி நடத்த ஆட்கள் இல்லாமல் வீரர்கள் மோசமாக திணறினார்கள்.

மோசம்
அதிலும் பாகிஸ்தான் அணியின் பீல்டிங் இந்த போட்டியில் மிகவும் மோசமாக இருந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மொத்தமாக 5க்கும் அதிகமான கேட்ச்களை பாகிஸ்தான் வீரர்கள் தவறவிட்டனர். முக்கியமான வீரர்களின் கேட்சைகளை கூட பாகிஸ்தான் வீரர்கள் தவறவிட்டனர்.

விமர்சனம்
இந்த நிலையில் பாகிஸ்தான் வீரர்களின் மோசமான ஆட்டம் குறித்து முன்னாள் வீரர் ஷோயப் அக்தர் கருத்து தெரிவித்துள்ளார். அதில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் செய்த தவறுகளுக்கான அறுவடையை தற்போது செய்து கொண்டு இருக்கிறது . அணி நிர்வாகம் எடுத்த தவறான முடிவுகள் எல்லாம் தற்போது அணிக்கு எதிராக திரும்பி உள்ளது.

மோசமான வீரர்கள்
மோசமான வீரர்களை அணியில் எடுப்பது, மோசமான வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது, மோசமான அணியை தேர்வு செய்வது என்று நிறைய தவறுகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் செய்துள்ளது. அதற்கான பலனை தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அனுபவிக்கிறது.

ஸ்கூல்
பாகிஸ்தான் வீரர்கள் ஸ்கூல் அணியை போல ஆடுகிறார்கள். ஸ்கூல் வீரர்களை விட மோசமாக ஆடுகிறார்கள். டெஸ்ட் போட்டியில் ஆடும் போது பாகிஸ்தான் வீரர்களின் லட்சணம் தெரிந்து விடுகிறது. மொத்தமாக அணியை மாற்ற வேண்டும், நிர்வாகத்தையும் மாற்ற வேண்டும், என்று அக்தர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications