Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாகிஸ்தான் வீரர்களை அனுமதிக்கவில்லை என்றால்,அது வெட்கக்கேடு..இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் கண்டனம்

மும்பை: இந்திய நிறுவனங்களுக்குச் சொந்தமான அணிகளால் பாகிஸ்தான் வீரர்கள் புறக்கணிக்கப்படுவதாக வெளியான செய்திகளுக்கு ,இங்கிலாந்து அணி கேப்டன் ஹாரி புரூக் கண்டனம் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் நடைபெறும் 'தி ஹண்ட்ரட்' தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை இணைக்குமாறு ஹாரி ப்ரூக் வலியுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தான் நீண்ட காலமாக ஒரு சிறந்த கிரிக்கெட் தேசமாக இருந்து வருவதாகவும், அந்த நாட்டு வீரர்கள் தொடரில் விளையாட அனுமதிக்கப்படாவிட்டால் அது "வெட்கக்கேடானது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.வரும் மார்ச் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள வீரர்களின் ஏலத்திற்கு முன்னதாக, நான்கு இந்திய நிறுவனங்களுக்குச் சொந்தமான அணிகள் பாகிஸ்தான் வீரர்களைப் புறக்கணிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சூழ்நிலையில், ப்ரூக் தனது கருத்தைப் பதிவு செய்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. மொத்தம் 63 ஆண் மற்றும் நான்கு பெண் பாகிஸ்தான் வீரர்கள் 'தி ஹண்ட்ரட்' ஏலத்திற்காகப் பதிவு செய்துள்ளனர்.ப்ரூக், 'சனரைசர்ஸ் லீட்ஸ்' (முன்னர் நார்தர்ன் சூப்பர்சார்ஜர்ஸ்) அணியால் ரூ. 5.68 கோடிக்கு (4,65,000 பவுண்டுகள்) ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது இந்தத் தொடரில் அதிக ஊதியம் பெறும் வீரர் என்ற பெருமையைப் அவருக்குத் தேடித் தரும்.

இது குறித்து பேசிய ஹாரி புரூக், "தற்போது எனது முக்கிய கவனம் டி20 உலகக் கோப்பையில் உள்ளது. 'தி ஹண்ட்ரட்' தொடர்பான விவகாரங்கள் எனக்கு அப்பாற்பட்டவை. பாகிஸ்தான் பல ஆண்டுகளாக ஒரு சிறந்த கிரிக்கெட் நாடாகவும், உலகிலேயே சிறந்த வீரர்களைக் கொண்டதாகவும் உள்ளது. அவர்களில் சிலரை 'தி ஹண்ட்ரட்' தொடரில் பார்க்க முடியாமல் போனால் அது வருந்தத்தக்கது" என்று தெரிவித்தார்.

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் மூத்த அதிகாரி ஒருவர்,ஐபிஎல் தொடர்பில்லாத அணிகளுக்கு மட்டுமே பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை வாங்கும் என்று தெரிவித்துள்ளார். எட்டு அணிகளில் மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ், எம்ஐ லண்டன், சதர்ன் பிரேவ் மற்றும் சன்ரைசர்ஸ் லீட்ஸ் ஆகிய நான்கு அணிகள் ஐபிஎல் அணிகளை இயக்கும் நிறுவனங்களுக்குச் சொந்தமானவை என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பேசிய முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன், நாட்டின் அடிப்படையில் கிரிக்கெட் வீரர்களை விலக்குவதை அனுமதிக்கப்படக்கூடாது" என்று வலியுறுத்தினார். இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் இந்த விவகாரத்தில் உடனடியாகச் செயல்பட வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தினார்.

Story first published: Saturday, February 21, 2026, 17:51 [IST]
Other articles published on Feb 21, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+