என்னப்பா இம்புட்டு காஸ்ட்லியா இருக்கு? பாகிஸ்தான் வீரர்கள் சாப்பிட்ட நிஜாம் ஹோட்டல் மெனு லிஸ்ட்
ஹைதராபாத் : பாகிஸ்தான் கிரிக்கெட் அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க வேண்டி இந்தியா வந்துள்ளது.
இந்தியாவில் பாகிஸ்தான் வீரர்களுக்கு தடபுடல் வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் பாகிஸ்தான் வீரர்களுக்கு உச்சபட்ச மரியாதை அளிக்கப்பட்டு வருகிறது.

முதல் பயிற்சி போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்ற பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது. அதன்பின் ஹைதராபாத்தில் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வரும் அந்த அணி வீரர்கள், சனிக்கிழமை இரவு அன்று அங்குள்ள "ஜூவல் ஆஃப் நிஜாம்" என்ற பிரபல உணவு விடுதிக்கு சென்றனர்.

ஹைதராபாத்தில் சுவையான அசைவ உணவு சாப்பிட விரும்பும் பணக்காரர்களின் முதல் விருப்பமாக இந்த உணவகம் உள்ளது. பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் குழு சனிக்கிழமை இரவு அங்கே சென்றனர்.
அங்கே அவர்களுக்கு அங்கு தயாரிக்கப்பட்ட உணவுகள் பரிமாறப்பட்டன. அந்த உணவகத்தில் நம் ஊரின் "முழு சாப்பாடு" போல அங்கே நான்கு வகையான முழு சாப்பாடு இருக்கும். ஒவ்வொன்றிலும் சுமார் 20 வகையான பதார்த்தங்கள் இடம் பெறும். அதைத் தவிர மெனுவில் உள்ள தனித்தனி உணவுகளையும் வாங்கிக் கொள்ளலாம்.

அங்கு முழு சாப்பாட்டின் விலை ரூ.2300 மட்டுமே. அதைத் தவிர தனித்தனி உணவுகளை மெனுவில் இருந்து கேட்டுப் பெற்றால் அதற்கு தனி விலை. மெனுவில் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் உணவு பரோட்டா மற்றும் நான். அதன் விலை ரூ.210 ஆகும். மற்ற சைட் டிஷ் விலை ரூ.650 முதல் ரூ.1250 வரை நீள்கிறது.
பாகிஸ்தான் வீரர்களுக்கு நிஜாம் உணவகத்தின் அனைத்து சிறந்த உணவுகளையும் பரிமாறி உள்ளனர். அவர்களுக்கு எந்த கட்டுப்பாடும் இன்றி நிஜாம் ஹோட்டலில் உணவு பரிமாறப்பட்டது. அதை வைத்துப் பார்த்தால் ஒரு நபருக்கு சுமார் ரூ.3000 முதல் 5000 கூட ஆகி இருக்கும்.
பாகிஸ்தான் அணி அடுத்ததாக ஆஸ்திரேலியா அணியுடன் பயிற்சிப் போட்டியில் மோத உள்ளது. அந்தப் போட்டி நாளை (அக்டோபர் 2) அன்று ஹைதராபாத் நகரில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியிலாவது பாகிஸ்தான் அணி வெற்றி பெறுமா என அந்த அணியின் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications