Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“நாங்க டுபாக்கூர்” என்பதை நிரூபித்த பாகிஸ்தான்.. உலகக்கோப்பைக்காகக் கொழும்புக்கு டிக்கெட் புக்கிங்

கொழும்பு: வங்கதேசத்திற்கு ஆதரவாக 2026 டி20 உலகக்கோப்பையைப் புறக்கணிப்போம் என்று மார்தட்டிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், தற்போது சத்தமில்லாமல் உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்கத் தயாராகிவிட்டது. இந்தியா வர மறுத்த வங்கதேசம் தொடரிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், தானும் அந்த வலையில் சிக்க விரும்பாத பாகிஸ்தான், இலங்கை செல்வதற்கான விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தான் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி, உலகக்கோப்பையைப் புறக்கணிப்பது குறித்துப் பரிசீலிப்போம் என்று கூறியிருந்தது வெறும் நாடகம் என்பது தற்போது உறுதியாகியுள்ளது. சல்மான் அலி ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணி, உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்கக் கொழும்பு செல்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணியுடன் இணைந்து ஒரே விமானத்தில் பாகிஸ்தான் அணியும் இலங்கை செல்லத் திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன

Pakistan Prepares for T20 World Cup 2026 Pakistan Team to Travel to Sri Lanka Amid Boycott Drama
.

பிரதமர் கொடுத்த அட்வைஸ்

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி, அந்நாட்டுப் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது பிரதமர், "வங்கதேசத்திற்கு நாம் ஆதரவு தெரிவிக்கலாம். ஆனால் அதற்காக உலகக்கோப்பையைப் புறக்கணிப்பது புத்திசாலித்தனம் அல்ல. தொடரைப் புறக்கணித்தால் ஏற்படும் பொருளாதார இழப்பை நம்மால் தாங்க முடியாது. எனவே அணியை விளையாட அனுப்புவதே சிறந்தது" என்று அறிவுறுத்தியுள்ளார்.

பிரதமர் மட்டுமல்லாமல், பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி, ராணுவ உயரதிகாரிகள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வாரியத் தலைவர்களான நஜாம் சேத்தி, ரமீஸ் ராஜா ஆகியோரும் உலகக்கோப்பையில் பங்கேற்க வேண்டும் என்றே வலியுறுத்தியுள்ளனர்.

குறிப்பாக, இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிக்கக் கூடாது என்றும், அப்படிச் செய்தால் ஐசிசி மூலம் கிடைக்கும் வருவாய் மற்றும் நஷ்ட ஈடு பிரச்சனைகளைச் சந்திக்கும் சூழல் ஏற்படும் ($38 மில்லியன் - ரூ.315 கோடி வரை இழப்பு ஏற்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது) என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் பிப்ரவரி 15 அன்று கொழும்பில் நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியில் பாகிஸ்தான் விளையாடுவது உறுதியாகியுள்ளது.

முடிவுக்கு வந்த நாடகம்

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெள்ளிக்கிழமை அல்லது திங்கட்கிழமை (பிப்ரவரி 2) வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி வரும் பாகிஸ்தான் அணி, அங்கிருந்து உலகக்கோப்பைக்கான பயணத்தைத் தொடங்கும். ஐசிசியின் எச்சரிக்கை மற்றும் பொருளாதாரத் தடைகளுக்குப் பயந்து பாகிஸ்தான் தனது புறக்கணிப்பு முடிவிலிருந்து பின்வாங்கியுள்ளது.

Story first published: Thursday, January 29, 2026, 7:20 [IST]
Other articles published on Jan 29, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+