Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஓய்வை அறிவித்தார் பாகிஸ்தானின் “புரஃபசர்” முகமது ஹபீஸ்.. 18 ஆண்டு கால ஆட்டம் முடிவுக்கு வந்தது!

லாகூர்: பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர் முகமது ஹஃபீஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.

Recommended Video

Pakistan's Mohammad Hafeez retires from international cricket | OneIndia Tamil

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் மிக முக்கிய வீரராக பார்க்கப்படுபவர் முகமது ஹஃபீஸ். அந்த அணியின் புரஃபசர் என செல்லமாக ரசிகர்களால் அழைக்கப்படுபவர்.

18 ஆண்டுகளாக சர்வதேச அரங்கில் கலக்கி வந்த அவர் தற்போது தனது கிரிக்கெட் பயணத்தை முடித்துக்கொண்டுள்ளார்.

எப்போது அறிமுகம்

எப்போது அறிமுகம்

வலது கை ஆல்ரவுண்டரான முகமது ஹஃபீஸ் கடந்த 2003ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம் அறிமுகமானார். இதுவரை

218 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 6,614 ரன்கள் குவித்துள்ளார். மேலும், 134 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்

புள்ளிவிவரங்கள்

புள்ளிவிவரங்கள்

இதே போல், 115 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள முகமது ஹஃபீஸ் 2, 440 ரன்களும், 61 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். மேலும், 55 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3, 652 ரன்களும், 53 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

இவ்வாறாக மொத்தம் 18 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். இவரின் மொத்த ரன்கள் 12,780 ஆகும். பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளார். அஃப்ரிடி, வசீம் அக்ரம், இன்சமாம் உல் அக் ஆகியோர் முதல் 3 இடங்களில் உள்ளார்.

தள்ளிப்போன ஓய்வு

தள்ளிப்போன ஓய்வு

ஹஃபீஸ் கடந்த 2018ம் ஆண்டு டிசம்பரில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இதன் பின்னர் கடந்த 2020ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடருடன் அனைத்து வடிவ கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். ஆனால் அந்த தொடர் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டதால் அவரின் ஓய்வு அறிவிப்பும் தள்ளிப்போனது. இந்நிலையில் தற்போது அறிவித்துள்ளார்.

ஹஃபீஸின் விளக்கம்

ஹஃபீஸின் விளக்கம்

இதுகுறித்து பேசியுள்ள அவர், பாகிஸ்தானுக்காக 18 ஆண்டுகள் சேவை செய்யும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்துள்ளது. எனது அணி சர்வதேச கிரிக்கெட்டில் எப்போதுமே ஒருபடி மேல் இருக்கிறது என பெருமை கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து முகமது ஹஃபீஸுக்கு ரசிகர்கள் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

Story first published: Monday, January 3, 2022, 13:32 [IST]
Other articles published on Jan 3, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+