
2வது டெஸ்ட்
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் டெஸ்ட் போட்டியிலும் இதே போன்று முதலில் பேட்டிங் செய்த போது 657 ரன்களை குவித்து அசத்தியது. ஆனால் 2வது போட்டியில் 281 ரன்களுக்கெல்லாம் அனைத்து விக்கெட்களையும் இழந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. இதற்கு காரணம் பாகிஸ்தானின் அறிமுக வீரர் அப்ரர் அகமது தான்.

புதிய சாதனை
பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் அறிமுக போட்டியிலேயே அதுவும் முதல் செஷனிலேயே 5 விக்கெட் ஹவுல் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை அப்ரர் அகமது பெற்றார். முதல் இன்னிங்ஸில் மொத்தமாக 7 விக்கெட்களை கைப்பற்றி 114 ரன்களை விட்டுக்கொடுத்தார். அகமதின் சில விக்கெட்கள் அனைவருக்குமே அதிர்ச்சியை கொடுத்தது. குறிப்பாக ஜாக் கிராவ்லே மற்றும் பென் ஸ்டோக்ஸின் விக்கெட்கள் தான் அட்டகாசமானது.

மேஜிக் டெலிவரி
அவர் ஜாக் கிராவ்லே, பென் டக்கெட், ஜோ ரூட், ஒல்லி போப், ஹாரி ப்ரூக் என 5 விக்கெட்களை அடுத்தடுத்து எடுத்ததால் இங்கிலாந்து அணி தடுமாறியது. அப்போது கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ( 30 ) மற்றும் வில் ஜாக்ஸ் (31) ஆகியோர் 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பிரிக்கவே முடியாமல் இருந்தனர். அப்போது அப்ரர் வீசிய ஒரு கூக்ளி பந்து மேஜிக்காக இருந்தது.

ஸ்டோக்ஸ் அதிர்ச்சி
ஆஃப் சைட் ஸ்டம்ப் லைனில் போடப்பட்ட பந்தை பென் ஸ்டோக்ஸ் மிடிலில் தான் வரும் என கணித்து ஸ்ட்ரோக் வைத்தார். ஆனால் பந்து யாருமே எதிர்பார்க்காத வகையில் அதிக பவுன்ஸும், அதிக டேர்னும் ஆகி லெக் ஸ்டம்ப்-ன் மீது பட்டது. இதனை சற்றும் ஏற்றுக்கொள்ளாத ஸ்டோக்ஸ், ஆச்சரியத்தில் வாயை பிழந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











