Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

'இந்தியா பைனலுக்கு வரணும்.. அங்க மறுபடியும் எங்க கிட்ட தோற்று போகணும்..' வாய்சவடால் விடும் அக்தர்

துபாய்: டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற வேண்டும் என்று இறுதிப் போட்டியில் மீண்டும் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே தனது தனிப்பட்ட ஆசை எனப் பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கு அட்டகாசமான இந்திய அணி தேர்ந்தெடுக்கப்பட்டது. மேலும், இந்திய அணியின் ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டார்.

இப்படி சூப்பர் அணியுடன் பெரும் எதிர்பார்ப்புடன் உலகக் கோப்பை தொடரில் களமிறங்கிய இந்திய அணிக்குத் தொடக்கமே சறுக்கலாக இருந்தது.

மோசமான தொடக்கம்

மோசமான தொடக்கம்

சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 151 ரன்களை குவித்தது. அடுத்துக் களமிறங்கிய பாகிஸ்தான் ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் மிக எளிதாக 152 ரன்களை எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. உலகக் கோப்பை தொடர் ஒன்றில் பாகிஸ்தானிடம் இந்தியா தோற்பது இதுவே முதல் முறையாகும்.

இந்தியா

இந்தியா

அடுத்து வந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்றிருந்தது. இந்த இரண்டு போட்டிகளிலும் இந்தியாவில் எந்த வீரரும் சொல்லிக் கொள்ளும்படி விளையாடவில்லை. இந்த அடுத்தடுத்த தோல்விகளால், மற்ற அணிகளின் முடிவுகளைப் பொறுத்து அடுத்த சுற்றுக்கு முன்னேறலாம் என்ற மோசமான இடத்திற்கு இந்தியா தள்ளப்பட்டது. இருப்பினும், அடுத்து ஆப்கன் மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டியில் அடுத்தடுத்து வென்று இந்தியா ஃபார்முக்கு திரும்பியுள்ளது.

ஷோயப் அக்தர்

ஷோயப் அக்தர்

நாளை நடைபெறும் போட்டியில் நியூசிலாந்து அணியை ஆப்கனை வீழ்த்தினால் மட்டுமே இந்தியா அணியின் அடுத்த சுற்றுக் கனவு கலையாமல் இருக்கும். இதுமட்டுமின்றி நாளை மறுநாள் நடைபெறும் போட்டியிலும், தேவையான நெட் ரன்ரேட்டிக்கு ஏற்ப நபியாவை இந்தியாவை வீழ்த்த வேண்டும். இப்படியொரு சிக்கலான சூழ்நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய அணி ஃபைனலுக்கு வர வேண்டும் என்றும் பாகிஸ்தான் மீண்டும் தோற்கடித்து கோப்பையை வெல்ல வேண்டும் என்பதைத் தனது ஆசை என ஷோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.

மீண்டும் பாகிஸ்தான்

மீண்டும் பாகிஸ்தான்

இது குறித்து ஷோயப் அக்தர் தனது யூடியூப் சேனலில் கூறுகையில், "தனிப்பட்ட முறையில் என்னைக் கேட்டால் டி20 உலகக் கோப்பைப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற வேண்டும். அங்கே மீண்டும் இந்தியாவைப் பாகிஸ்தான் தோற்கடிக்க முடியும். இது கிரிக்கெட்டுக்கு நல்லது. மேலும் உலகக் கோப்பையை இன்னும் அதிகம் ரீச் ஆகும். நான் ஆரம்பத்திலேயே சொன்னேன், 2 ஆட்டங்களில் தோல்வி அடைந்ததால் இந்திய அணியின் உலகக் கோப்பைப் பயணம் முடிந்துவிடவில்லை என்று!

பாகிஸ்தான் அணி

பாகிஸ்தான் அணி

பாகிஸ்தான் அணியினர் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என யோசிக்கக் கூடாது. இப்போது அவர்கள் வேலை ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பெற வேண்டும் என்பது தான். எனக்கு ஒரு விஷயம் மீண்டும் நடக்க வேண்டும். இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மீண்டும் மோத வேண்டும். இந்திய அணி இரு தோல்விகளுக்குப் பிறகு சிறந்த கம்பேக் கொடுத்துள்ளது. இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு முடிந்துவிடவில்லை,

நியூசிலாந்து போட்டி

நியூசிலாந்து போட்டி

இந்தியாவின் தலையெழுத்து இப்போது நியூசிலாந்து கையில் இருந்தது. ஆப்கன் அணியிடம் நியூசிலாந்து தோல்வி அடைந்துவிட்டால் பல ஊகங்களும் பரவும். அப்போது சமூக ஊடகத்தில் நியூசிலாந்து தோல்வி மிகப் பெரிய ஒரு விவாதத்தைக் கிளப்பும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது. உண்மையில் ஆப்கானிஸ்தானை விட நியூசிலாந்து சிறந்தது. இந்தியாவின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் போட்டியாக ஆப்கன் - நியூசிலாந்து மாறியுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.

Story first published: Saturday, November 6, 2021, 18:47 [IST]
Other articles published on Nov 6, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+