For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நடு பிட்ச்-ல நின்னு கதையா பேசிக்கிட்டு இருக்கீங்க? மொக்கையாக ரன் அவுட் ஆன பாக். வீரர்

Recommended Video

வேடிக்கையான முறையில் ரன் அவுட் ஆன அசார் அலி- வீடியோ

அபுதாபி : ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் இடையே நடந்து வரும் டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வலுவான முன்னிலை பெற்றுள்ளது.

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் அசார் அலி ரன் அவுட் ஆன விதம் மிக மோசமானதாக இருந்தது.

கிரிக்கெட் வரலாற்றில் வேடிக்கையான ரன் அவுட்களை தொகுத்தால் இந்த ரன் அவுட்டையும் நிச்சயம் அதில் சேர்க்க வேண்டும் என்பது போன்ற ஒரு ரன் அவுட் இது.

பேட்டிங் செய்த அசார் அலி

பேட்டிங் செய்த அசார் அலி

பாகிஸ்தான் அணி தன் இரண்டாவது இன்னிங்க்ஸ்-ஐ ஆடிக் கொண்டு இருந்த போது அசார் அலி அரைசதம் அடித்து பேட்டிங் செய்து வந்தார். மறு முனையில், ஆசாத் ஷபிக் நின்று கொண்டு இருந்தார். ஆஸ்திரேலியாவின் பீட்டர் சிடில் பந்து வீசினார்.

இப்படி கதை பேசலாமா?

இப்படி கதை பேசலாமா?

அசார் அலி அடித்த பந்து எட்ஜ் ஆகி பவுண்டரியை நோக்கி சென்றது. ஆனால், வேகம் குறைந்த பந்து பவுண்டரி கோட்டை எட்ட சில அடி தூரம் இருக்கும் முன் நின்று விட்டது. இது தெரியாத பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் பவுண்டரி அடித்து விட்டதாக எண்ணி, சாவகாசமாக நடு பிட்ச்சில் நின்று கதை பேசிக் கொண்டு இருந்தனர்.

வேடிக்கை பார்த்த வீரர்கள்

வேடிக்கை பார்த்த வீரர்கள்

பந்தை துரத்திக் கொண்டு ஓடிய ஸ்டார்க் பந்தை எடுத்து விக்கெட் கீப்பர் டிம் பெயினிடம் வீசினார். அவர் எளிதாக அசார் அலியை ரன் அவுட் செய்தார். ஸ்டார்க் பந்தை எடுத்து வீசியதையோ, டிம் பெயின் ரன் அவுட் செய்வதையோ கவனிக்காமல் இருந்த அசார் அலி மற்றும் ஷபிக், பிட்சுக்கு நடுவே நின்று கொண்டு ஆஸ்திரேலிய வீரர்கள் ஏன் விக்கெட் எடுத்ததைப் போல கொண்டாடுகிறார்கள் என வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றனர்.

ரொம்ப லேட்

ரொம்ப லேட்

அம்பயர் அவுட் கொடுத்ததை அடுத்து தான் பந்து பவுண்டரிக்கே போகவில்லை என்ற விஷயம் அசார் அலிக்கு தெரிந்துள்ளது. அசார் அலி இந்த போட்டியில் 64 அடித்து நல்ல நிலையில் இருந்த போது, இப்படி மொக்கையாக ரன் அவுட் ஆகி வெளியேறி உள்ளார். இந்த போட்டியில் முதல் இன்னிங்க்ஸில் பாகிஸ்தான் 282 ரன்களும், ஆஸ்திரேலியா 145 ரன்களும் எடுத்து இருந்தன. இரண்டாம் இன்னிங்க்ஸ் ஆடி வரும் பாகிஸ்தான் 400 ரன்களுக்கும் மேல் முன்னிலையில் இருப்பதால், ஆஸ்திரேலியா வெற்றி பெறுவது கடினமே. அதனால், இந்த ரன் அவுட் பாகிஸ்தானுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.

Story first published: Thursday, October 18, 2018, 15:16 [IST]
Other articles published on Oct 18, 2018
English summary
Pakistan’s Azhar Ali run out is one of the dumbest run out in cricket history
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X