Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகக் கோப்பையை இந்தியா ஜெயிக்கும்! பாகிஸ்தானின் பஷீர் சாச்சா ஆசி!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பரம ரசிகர் பஷீர் சாச்சா இந்திய அணி உலகக் கோப்பையை ஜெயிக்க வேண்டும் விருப்பம் தெரிவித்துள்ளார். டோணிக்கு மகள் பிறந்த ராசி, கண்டிப்பாக அவரை கோப்பையை வெல்ல வைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சிகாகோவைச் சேர்ந்த பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர் முகமது பஷீர். பாகிஸ்தான் தேசியக் கொடியை உடையாக அணிந்து பாகிஸ்தான் பங்கேற்கும் போட்டிகளில் காட்சியளிக்கும் இவர், கிரிக்கெட் ரசிகர்களிடையே பிரபலம்.

இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளை இவர் தவற விடுவதேயில்லை. சிகாகோவில் வசித்து வரும் இவர் அங்கு முஹல் உணவு விடுதி நடத்தி வருகிறார். உலகின் எந்த மூலையில் பாகிஸ்தான் அணி கிரிக்கெட் விளையாடினாலும், அங்கு சென்று விடுவார்.

டோணி டிக்கெட்

டோணி டிக்கெட்

கடந்த ஆண்டு வங்கதேசத்தில் நடைபெற்ற டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியைப் பார்க்க வந்த அவருக்கு இறுதிப் போட்டியைப் பார்க்க டிக்கெட் கிடைக்கவில்லை. அவருக்கு, இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோணி தனது ஒதுக்கீட்டில் இலவச டிக்கெட் வாங்கிக் கொடுத்தார்.

இருநாட்டு ரசிகர்கள்

இருநாட்டு ரசிகர்கள்

63 வயது கடந்து விட்ட பஷீர், தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று, இருநாட்டு ரசிகர்களின் ஆதரவையும் பெற்றுள்ளார்.

இருநாட்டின் கொடிகளில் உடை

இருநாட்டின் கொடிகளில் உடை

முகமது பஷீர் இந்த உலகக் கோப்பை போட்டிக்காக பிரத்தியேகமாக ஒரு உடையை அமெரிக்காவிலேயே தயாரித்துள்ளார். வலது பக்கத்தில் இந்திய நாட்டின் கொடியையும், இடது பக்கத்தில் பாகிஸ்தான் நாட்டின் கொடியையும் சட்டையாக தைத்து அணிந்துள்ளார். மேலும் சட்டையில் இரு நாட்டின் கொடிகளும் சிறிய அளவில் பல இடங்களில் பொறிக்கப்பட்டிருக்கிறது.

இருநாட்டின் நல்லுறவு

இருநாட்டின் நல்லுறவு

இரு நாட்டின் நல்லுறவை மேம்படுத்தும் நோக்கத்திற்காக இந்த உடையை பிரத்தியேகமாக தயாரித்திருப்பதாக கூறுகிறார் முகமது பஷீர். இந்த உடையை தயாரிக்க ரூ.18 ஆயிரம் செலவானதாம்.

இந்தியா ஜெயிக்கும்

இந்தியா ஜெயிக்கும்

இரு நாட்டு நல்லுறவுக்கு பாடுபடும் பஷீர் சாச்சா கூறிவருவதுதான் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. டோணிக்கு மகள் பிறந்த ராசி அவர் நிச்சயம் கோப்பையை வெல்லுவார் என்று கூறியுள்ளார்.

கட்டித்தழுவிய டோணி

கட்டித்தழுவிய டோணி

மெல்பர்ன் நகரில் டோணியிடம் இதையே கூறி அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் பஷீர் சாச்சா. அவரை கட்டித்தழுவிய டோணி, அவருடைய சட்டையில் தன்னுடைய ஆட்டோகிராப் போட்டு அனுப்பிவைத்தாராம்.

பஷீர் சாச்சாவின் ஆசி பலிக்குமா? பொறுத்திருந்து பார்க்கலாம்.

Story first published: Sunday, March 8, 2015, 10:23 [IST]
Other articles published on Mar 8, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+