Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உங்ககிட்ட ஓப்பனிங்கே நல்லாயில்லயப்பா.. கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தான் பதிவு செய்த மோசமான சாதனை!

கிறைஸ்ட்சர்ச்: ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஒரு ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த முதல் அணி என்ற மோசமான சாதனையை இன்று நிகழ்த்தியுள்ளது பாகிஸ்தான்.

உலக கோப்பை குரூப் பி லீக் ஆட்டத்தில் கிறைஸ்ட்சர்ச்சில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3.30 மணிக்கு தொடங்கிய போட்டியில், பாகிஸ்தானும், மேற்கிந்திய தீவுகளும் மோதின.

மே.இ.தீவுகள் அபாரம்

மே.இ.தீவுகள் அபாரம்

டாசில் வென்ற பாகிஸ்தான் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. மேற்கிந்திய தீவுகளின் பேட்ஸ்மேன்கள் கடைசி நேரத்தில் ரவுண்டு கட்டி அடித்து ஸ்கோரை 310ஆக உயர்த்தினர்.

முட்டைக்கு ஒன்னு

முட்டைக்கு ஒன்னு

இதனிடையே 2வதாக பேட்டிங் செய்ய வந்த பாகிஸ்தானோ, ஆட்டத்தின் 2வது பந்திலேயே நாசிர் ஜாம்ஷெட் விக்கெட்டை பறிகொடுத்தது. எனவே பூஜ்யம் ரன்னுக்கு ஒரு விக்கெட்டை இழந்தது பாகிஸ்தான். ஜெரோம் டைலர் பந்தில் ஆன்ட்ரே ரசலிடம் கேட்ச் கொடுத்து ஜாம்ஷெட் நடையை கட்டினார்.

ஒரே ரன்.. ஊத்திக்கொண்ட பாக்.

ஒரே ரன்.. ஊத்திக்கொண்ட பாக்.

பாகிஸ்தான் ஒருரன் எடுத்திருந்த நிலையில் ஒன்டவுன் இறங்கிய யூனிஸ்கான் முதல் பந்திலேயே அவுட் ஆனார். இதையடுத்து ஹரீஷ் சொகைல், அகமது செஷாத் ஆகியோரும் அவுட் ஆகினர். அப்போது 3.1 ஓவர்களில் பாகிஸ்தான் 1 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

சோதனையில் ஒரு சாதனை

சோதனையில் ஒரு சாதனை

இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் மோசமான தொடக்கத்தை கொடுத்த நாடு பட்டியலில் முதல் இடத்துக்கு வந்துள்ளது பாகிஸ்தான்.

கனடா

கனடா

முன்னதாக 2006ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் கனடா அணி, 4 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்ததுதான் மோசமான சாதனையாக இருந்து வந்தது.

Story first published: Saturday, February 21, 2015, 10:38 [IST]
Other articles published on Feb 21, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+