Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக கோப்பை கிரிக்கெட்.. அபிநந்தனை கிண்டல் செய்து பாகிஸ்தான் விளம்பரம்.. இந்தியர்கள் கொதிப்பு

Recommended Video

உலக கோப்பை போட்டிக்காக அபிநந்தனை கிண்டல் செய்த பாகிஸ்தான் டி.வி

இஸ்லாமாபாத்: இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து இந்திய ராணுவ வீரர் அபிநந்தனை கிண்டல் செய்து பாகிஸ்தான் விளம்பரம் வெளியிட்டுள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தியாபாகிஸ்தான் அணிகள் வரும் ஜுன் 16ம் தேதி மோதுகிறது. இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன், பாகிஸ்தான் எல்லையில் விமானத்தை விரட்டி அடிக்கும் போது அந்நாட்டு எல்லைக்குள் தவறி விழுந்தார்.

அவரை பிடித்து வைத்து விசாரித்த பாகிஸ்தான் ராணுவம் அவர் டீ சாப்பிட்டுக்கொண்டே அந்நாட்டு ராணுவத்தினரின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் வகையில் வீடியோ வெளியிட்டு இருந்தது.

டீ கப்புடன் ஒருவர்

இந்நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜாஸ்டிவி இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை போன்று மீசை வைத்த ஒருவரை, இந்தியாவின் நீல நிற கிரிக்கெட் ஜெர்சி அணிய வைத்து டீ சாப்பிட வைத்து சில கேள்விகளை கேமராவை வைத்து கேட்டுள்ளது.

 இந்தியா டாஸ் வெல்லுமா

இந்தியா டாஸ் வெல்லுமா

அதில் பாகிஸ்தான் உடனான போட்டியில் இந்தியா டாஸ் வெல்லுமா என கேட்கிறது. அதற்கு அபிநந்தனை போல் உள்ள ஒருவர், என்னை மன்னிக்கவும், உங்களது இந்த கேள்விக்கு பதில் சொல்ல விரும்பவில்லை என்கிறார்.

 கப்பை கொடுத்து போ

கப்பை கொடுத்து போ

இதேபோல் அவரிடம் மற்றொரு கேள்வியும் கேட்கப்படுகிறது.அதற்கும் அவர் என்னை மன்னிக்கவும், உங்களது இந்த கேள்விக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. அவரிடம் டீ எப்படி இருக்கிறது என்று கேட்கிறார்கள்.அதற்கு அவர் சூப்பர் என்கிறார். இதைத் தொடர்ந்து அவரை போக சொல்கிறார்கள். அப்போது அவர் டீ குடித்த கப்புடன் செல்ல முயல்கிறார். அவரிடம் எங்க போறீங்க கப் பை கொடுங்க என்று பிடித்து இழுக்கிறார்கள். இப்படி முடிகிறது அபிநந்தனை கிண்டல் செய்யும் இந்த விளம்பரம்.

பாகிஸ்தான் ஜேஷ் டிவி

பாகிஸ்தான் ஜேஸ் டிவி இந்தியா பாகிஸ்தான் இடையே நடக்கும் போட்டியை லைவாக கண்டுகளிக்கலாம் என்று கூறி இதற்கான விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தை பார்த்த இந்திய மக்கள் கடுமையாக திட்டி வருகிறார்கள்.இதுதவறான செயல் என கண்டனங்கள் எழுந்துள்ளது.

Story first published: Tuesday, June 11, 2019, 16:56 [IST]
Other articles published on Jun 11, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+