
அபார பந்துவீச்சு
இதனை அடுத்து தொடக்க வீரர்களாக பாபர் அசாம் , முகமது ரிஸ்வான் ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரை புவனேஸ்வர் குமார் துல்லியமாக வீசி, ஒரு ரன் மட்டுமே விட்டு கொடுத்தார். இதனையடுத்து ஆர்ஸ்தீப் சிங் , தனது முதல் பந்திலேயே பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமின் விக்கெட்டை வீழ்த்தினார். இதனால் பாகிஸ்தான் அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.

அபார ஆட்டம்
இதனையடுத்து முகமது ரிஸ்வான் 4 ரன்கள் எடுத்த போது ஆர்ஸ்தீப் வீசிய ஷாட் பாலில் ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணி 15 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறியது. இதனையடுத்து ஷான் மகசூத், இப்திகார் ஆகியோர் ஜோடி சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனையடுத்து அக்சர் பட்டேல் வீசிய ஒரே ஓவரில் பாகிஸ்தான் அணி 21 ரன்கள் விளாசியது.

சரிந்த விக்கெட்
இதனால் 34 பந்தில் இஃப்திகார் அரைசதம் கடந்தார். பாகிஸ்தான் ரன் குவித்து வந்த நிலையில், முகமது ஷமி இஃப்திகார் விக்கெட்டை வீழ்த்தினார். இதனையடுத்து ஹர்திக் பாண்டியா வீசிய 14வது ஓவரில் 2 விக்கெட்டுகள் வீழ்ந்தது. அதிரடி வீரர்களான நவாஷ் 9 ரன்களும், ஆசிஃப் அலி 2 ரன்களிலும் வீழ்த்தினார்.

160 ரன்கள் இலக்கு
இதனையடுத்து 91 ரன்களில் 3 விக்கெட் இழந்த பாகிஸ்தான் அணி, 120 ரன்கள் சேர்ப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஷான் மகசூத் கடைசி வரை ஆட்டமிழக்காமல் நிதானமாக விளையாடி அரைசதம் கடந்தார். ஷாகின் ஆப்ரிடி தன் பங்கிற்கு 16 ரன்கள் எடுக்க, பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 159 ரன்களுக்கு 8 விக்கெட் இழந்தது. ஆர்ஸ்தீப், ஹர்திக் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.


Click it and Unblock the Notifications











