இங்கிலாந்தின் அசுர வேட்டை.. திருப்புமுனை தந்த பாபர் அசாமின் விக்கெட்.. வெற்றி பெற 138 ரன்கள் இலக்கு!
டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக போராடி ரன் சேர்த்துள்ளது பாகிஸ்தான் அணி.
இரு அணிகளும் மோதும் இந்த இறுதிப்போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் முதலில் சிறப்பாக அமைந்த போதும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அதிரடி வீரர் முகமது ரிஸ்வான் ஏமாற்றினார்.

பாகிஸ்தானின் இன்னிங்ஸ்
தொடக்க வீரர்கள் முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் மிகவும் நிதானமாக ஆடி 29 ரன்கள் வரை பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஆனால் சாம் கரண் விரித்த வலையில் சிக்கி அதிரடி வீரர் முகமது ரிஸ்வான் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன்பின்னர் வந்த முகமது ஹாரிஸ் வெறும் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். இதனால் 45 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து பாகிஸ்தான் தடுமாறியது.

மிடில் ஓவர்
அப்போது ஜோடி சேர்ந்த பாபர் அசாம் - ஷான் மசூத் ஜோடி சீரான வேகத்தை ரன்களை குவித்தனர். ஒருபுறம் மசூத் அதிரடி காட்ட, பாபர் சிங்கிள் அடித்துக் கொடுத்தார். இதனால் 11 ஓவர்களில் 84 ரன்களுக்கு ஸ்கோர் சென்றது. இவர்கள் காப்பாற்றிவிடுவார்கள் என்று நினைத்த போது தான் அடில் ரஷித் பெரும் அதிர்ச்சியை கொடுத்தார்.

திருப்புமுணை
அதிரடியை தொடங்கலாம் என நினைத்த போது பாபர் அசாம் 32 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றினார். ஷான் மசூத்தும் 38 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார். இதன்பின்னர் வந்த ஒரு வீரர் கூட நிலைத்து நிற்காமல் அடுத்தடுத்து அவுட்டானதால், மிகவும் மோசமான நிலைக்கு பாகிஸ்தான் சென்றது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 137 ரன்களை மட்டுமே சேர்த்தது.

வெற்றி பெற முடியுமா?
இங்கிலாந்து அணி தரப்பில் சிறப்பாக செயல்பட்ட சாம் கரண் 4 ஓவர்களை வீசி 3 விக்கெட்களை கைப்பற்றி 12 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். அவரின் எகானமி 3 ரன்கள் மட்டுமே ஆகும். மெல்பேர்ன் மைதானத்தில் 138 என்ற இலக்கு சுலபமாக எட்டக்கூடியது என்பதால் இங்கிலாந்தின் பக்கமே வெற்றி வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications