Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“இத பண்ணுங்க சரியாகிடும்”.. இந்திய அணிக்கு உள்ள பிரச்னை.. டிப்ஸ் கூறிய பாக். கேப்டன் பாபர் அசாம்!

அமீரகம்: இந்திய அணி சிறப்பாக விளையாடுவதற்கு பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் டிப்ஸ் கொடுத்துள்ளார்.

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி லீக் சுற்றிலேயே மோசமான தோல்விகளை சந்தித்து வெளியேறியது.

பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுடனான தோல்விகளே இந்திய அணி அரையிறுதி போகாததற்கு காரணம்.

 பயிற்சியாளர் விளக்கம்

பயிற்சியாளர் விளக்கம்

டி20 உலகக்கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி, மோசமான தோல்வியடைந்து வெளியேறியதற்கு பயோ பபுள் தான் காரணம் என ரவி சாஸ்திரி விளக்கம் அளித்திருந்தார். பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தொடர்ந்து பயோ பபுள் சூழலில் இருந்தால் எப்படிப்பட்ட வீரரும் மோசமாக விளையாடக்கூடும் எனத்தெரிவித்தார்.

தோல்விக்கான காரணம்

தோல்விக்கான காரணம்

ஐபிஎல் தொடருக்காக பபுளுக்குள் சென்ற வீரர்கள், பின்னர் டெஸ்ட் சாம்பியன்ஷிப், இங்கிலாந்து டெஸ்ட் தொடர், தற்போது டி20 உலகக்கோப்பை தொடர் என தொடர்ந்து 6 மாதங்களாக பயோ பபுள் சூழலில் இருந்துள்ளனர். அவர்களுக்கு சிறிது கால அவகாசம் கொடுத்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். அதுவே தோல்விக்கு காரணம் எனத் தெரிவித்தார்.

டிப்ஸ் கூறிய பாபர்

டிப்ஸ் கூறிய பாபர்

இந்நிலையில் ரவி சாஸ்திரியின் கருத்து குறித்து பாபர் அசாம் பேசியுள்ளார். நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், கிரிக்கெட்டில் பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் இருக்கத்தான் செய்யும். பயோ பபுளில் இருக்கும் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டு சிரமப்படுவார்கள். நாங்கள் அதனை சமாளிக்க ஒரு குழுவாக சேர்ந்து செயல்படுகிறோம். ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைப்பாக இருக்கிறோம்.

ஓய்வெடுங்கள்

ஓய்வெடுங்கள்

ஒரு வீரராக நீங்கள் மனதை சாந்தப்படுத்த வேண்டும். அழுத்தங்களை குறைக்க பழகிக்கொள்ள வேண்டும். ஒருகட்டத்தில் நமக்கு அனைத்தும் மோசமாக அமைகிறது என்றால், எதனையும் யோசிக்காமல் பபுளில் இருந்து வெளியேறி சற்று ஓய்வெடுக்க வேண்டும். அப்படி செய்யாமல் தொடர்ந்து பபுளில் இருந்தால் மன அழுத்தம் ஏற்பட்டு கெட்ட விஷயங்களை மட்டுமே நினைக்க தோன்றும் என பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, November 10, 2021, 20:30 [IST]
Other articles published on Nov 10, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+