Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இணையத்தில் லீக்கான பாபர் அசாம் வாட்ஸ் அப் மெசேஜ்.. அசிங்கமா இருக்கு! வக்கார் யூனிஸ் கண்டனம்

லாகூர் : ஐசிசி உலக கோப்பையை இம்முறை பாகிஸ்தான் அணி தான் வெல்லும் என பல கிரிக்கெட் விமர்சகர்களும் நம்பிக்கையாக தெரிவித்து இருந்தார்கள். ஆனால் கடந்த இரண்டு மாதமாகவே பாகிஸ்தான அணி கிரிக்கெட் மைதானத்தில் தடுமாறுகிறது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடங்குவதற்கு முன்பு ஐசிசி தரவரிசை பட்டியலில் நம்பர் ஒன் இடத்தில் இருந்த பாகிஸ்தான் அணி இலங்கை மற்றும் இந்தியாவுக்கு எதிராக தோல்வியை தழுவி அந்த தொடரில் இருந்து வெளியேறியது.

Pakistan skipper Babar azam whatsapp chat leak created controversy

அதன் பிறகு ஐசிசி உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடிய 6 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று நான்கில் தோல்வியை தழுவி புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கிறது. இதனால் பாபர் அசாம் கேப்டன் பதவியை விட்டு நீக்க வேண்டும் என்று பலரும் போர்க் கொடி தூக்கி வருகிறார்கள். இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக இருக்கும் சாகா அஸ்ரப்க்கும் பாபர் அசாமுக்கும் பனிப்போர் ஏற்பட்டிருப்பதாக பாகிஸ்தான் ஊடகங்களில் செய்தி வெளியானது.

இதில் பாபர் அசாம் தொலைபேசிகளை ஜாகா அஸ்ரப் எடுப்பதில்லை என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் பாகிஸ்தான் ஊடகம் ஒன்று பாபர் அசாமின் வாட்ஸ்அப் மெசேஜ்களை லீக் செய்திருக்கிறது. அதில் பாபர் அசாம் நியூ என பதிவு செய்யப்பட்டுள்ள நம்பருக்கு பாபர், நீங்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்ததாகவும் ஆனால் அதற்கு அவர் அழைப்பை எடுக்கவில்லை என்றும் செய்திகள் வெளியாகிறது.

இது உண்மையா என சல்மான் என்ற நபர் கேள்வி கேட்டிருக்கிறார். இதற்கு பாபர் அஸாம் நியூ என பதிவு செய்யப்பட்ட நம்பரில் இருந்து இல்லை நான் யாருக்கும் கால் செய்யவில்லை என்ற பதில் வந்திருக்கிறது. இதுதான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள வகார் யூனிஸ், பாகிஸ்தான் ஊடகங்களின் இந்த செயல் அசிங்கமாக இருக்கிறது. பாபர் அசாமின் whatsapp மெசேஜ்களை அவருடைய அனுமதி இல்லாமல் எப்படி நீங்கள் வெளியிட்டீர்கள்? தயவுசெய்து பாபர் அசாமை விட்டு விடுங்கள். அவர் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் சொத்து என்று அவர் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

Story first published: Monday, October 30, 2023, 18:44 [IST]
Other articles published on Oct 30, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+