For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பாக். வீரர் சையது ஆப்ரிடி மகளை மணந்த ஷாகின் ஆப்ரிடி.. காதலுக்கு பச்சை கொடி.. ரசிகர்கள் நெகிழ்ச்சி

கராச்சி: இந்த வாரம், காதல் வாரம் என்பது போல் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் அனைவருக்கும் வரிசையாக திருமணம் நடைபெற்று வருகிறது. முதலில் ராகுலுக்கு திருமணமானது.

இதனை தொடர்ந்து அக்சர் பட்டேலுக்கு திருமணம் நடந்தது. இதனைத் தொடர்ந்து நீண்ட நாட்களாக காதலித்து வந்த பாகிஸ்தான் ஜோடி தற்போது திருமணம் என்ற நிக்காஹ் பந்தத்தில் இணைந்துள்ளது.

பாகிஸ்தான் அணியின் மிரட்டும் வேகப்பந்துவீச்சாளராக இருந்த முகமது அமீருக்கு பிறகு அந்த இடத்தை நிரப்பியவர் தான் ஷாகின் ஆப்ரிடி. காஷ்மீர் ஆப்பிள் போல் தோற்றம் கொண்டாலும், பேட்ஸ்ன்களுக்கு எப்போதும் வில்லன் தான்.

ஹீரோ

ஹீரோ

தன்னுடைய 18வது வயதில் பாகிஸ்தானுக்காக 2018ஆம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடிய ஆப்ரிடி, சில போட்டிகளிலேயே உலகின் நம்பர் 1 வீரராக அறியப்பட்டார். 25 டெஸ்ட் போட்டியில் விளையடி 99 விக்கெட்டுகளையும், 32 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 62 விக்கெட்டுகளையும். 47 டி20 போட்டிகளில் விளையாடி 52 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார்.

200 விக்கெட்

200 விக்கெட்

22 வயதுக்குள் சர்வதேச கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தானின் ஹீரோவாக திகழ்ந்தார். மேலும், 2021ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோபபையில் 3 முக்கிய இந்திய வீரர்களின் விக்கெட்டை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தார்.

காதல்

காதல்

இந்த நிலையில், பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் சையது ஆப்ரிடியி மகளை ஷாகின் ஆப்ரிடி காதலிப்பதாக தகவல் வெளியானது. ஆனால் சையது ஆப்ரிடி தான் தனது மகளை ஷாகின் ஆப்ரிடிக்கு திருமணம் செய்து தர முன் வந்தததாக செய்திகள் வெளியானது. இதனைத் தொடர்ந்து ரமலான் நோன்பு நிகழ்ச்சிக்கு ஷாகின் ஆப்ரிடியை வீட்டிற்கு அழைத்து விருந்து எல்லாம் கொடுத்தார் ஆப்ரிடி

திருமணம்

திருமணம்

அப்படி ஒரு தந்தையா, நமக்கு இப்படி ஒரு மாமனார் இல்லையே என ரசிகர்கள் ஏங்கும் அளவுக்கு நடந்து கொண்ட ஆப்ரிடி, இன்று முறைப்படி இருவருக்கும் திருமணம் செய்து வைத்தார். இத்தனைக்கும் அவருக்கு 22 வயது தான் ஆகிறது என்பதை இந்திய பெற்றோர்கள் நோட் பணிக்குங்கப்பா. அன்சாவுடன் ஷாகின் ஆப்ரிடி திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் கலக்கி வருகிறது.

Story first published: Friday, February 3, 2023, 22:12 [IST]
Other articles published on Feb 3, 2023
English summary
Pakistan star cricketer shaheen afridi married to syed afridi daughter பாக். வீரர் சையது ஆப்ரிடி மகளை மணந்த ஷாகின் ஆப்ரிடி.. காதலுக்கு பச்சை கொடி.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+