காசு தரமாட்றாங்கன்னு சொன்ன வீரருக்கு வாழ்நாள் தடை.. பாகிஸ்தான் கிரிக்கெட்டில் வெடித்த சர்ச்சை
லாகூர்: பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடியதற்கு உரிய பணம் தரவில்லை என்று ஆஸ்திரேலிய வீரர் ஜேம்ஸ் ஃபால்குனர் கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜேம்ஸ் ஃபால்குனர் குயட்டா கிளாட்யட்டர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த சீசனில் அவர் 6 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இதில் 6 விக்கெட்டுகளும், 49 ரன்களையும் ஜேம்ஸ் ஃபால்குனர் வீழ்த்தியுள்ளார். இந்த நிலையில், கடைசி 3 போட்டியாக ஃபால்குனர் விளையாடவில்லை.

விலகிய ஃபால்குனர்
இந்த நிலையில், சமூக வலைத்தளத்தில் ஜேம்ஸ் ஃபால்குனர் வெளியிட்டுள்ள பதிவில், பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரிலிருந்து விலகுகிறேன். இதற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். பாகிஸ்தான் ரசிகர்கள் அருமையானவர்கள். பாகிஸ்தானில் கிரிக்கெட்டை ஊக்குவிக்க தான் இந்த தொடரில் விளையாட ஒப்புக்கொண்டேன்.

பங்கேற்க முடியாது
ஆனால் என்னை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏமாற்றி விட்டனர், மரியாதை குறைவாக நடத்திவிட்டனர். எனக்கான தொகை இன்னும் தரப்படவில்லை. இது குறித்து கேட்டால் உரிய பதில் இல்லை. இதனால் இனியும் இந்த தொடரில் என்னால் பங்கேற்க முடியாது என்று தெரிவித்தார்.

என்ன நடந்தது
இதனிடையே, ஜேம்ஸ் ஃபால்குனரின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், அவதூறு பரப்பும் வகையில் செயல்பட்ட ஃபால்குனருக்கு பி.எஸ்.எல். தொடரில் பங்கேற்க வாழ்நாள் தடை விதித்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த 7 ஆண்டுகளில் இதுவரை யாரும் இப்படி ஒரு குற்றச்சாட்டை கூறியதில்லை என்றும் பாக். கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

விளக்கம்
ஜேம்ஸ் ஃபால்குனர் வழங்கிய வங்கி கணக்கில் 75 சதவீத பணத்தையும் போட்டு விட்டதாகவும், தற்போது அவர் வேறு வங்கி கணக்கை வழங்கி முழு பணத்தையும் இதில் போடங்கள் என்று சொல்வதாகவும் பாக். வாரியம் கூறியுள்ளது. ஒரே வீரருக்கு எவ்வாறு இரு முறை சம்பளம் வழங்க முடியும் என்று கேள்வி எழுப்புயுள்ள பாக். கிரிக்கெட் வாரியம், இது தொடர்பான மீட்டிங்கின் போது, ஃபால்குனர் ஹோட்டல் அறையை சேதப்படுத்திவிட்டதாகவும் பாக் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications