Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாகிஸ்தான் டி20 அணியில் அதிரடி.. கேப்டன் பதவியிலிருந்து சல்மான் அலி நீக்கம்.. பாபர் அசாம் இல்லை

லாகூர்: இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடருக்காக பாகிஸ்தான் தனது டி20 அணியில் பெரும் மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. சல்மான் அலி ஆகா கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, புதிய கேப்டனாக சாஹிப்ஜாதா ஃபர்ஹான் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், பாபர் அசாம் மற்றும் ஷாஹீன் அஃப்ரிடி ஆகியோர் டி20 அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

மூத்த வீரர்களான பாபர் அசாம், ஷாஹீன் அஃப்ரிடி மற்றும் சல்மான் ஆகா ஆகியோர் டி20 அணியில் இருந்து நீக்கப்பட்டிருந்தாலும், ஒருநாள் அணியில் தங்களது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளனர். இதில் சாஹிப்ஜாதா ஃபர்ஹான் டி20யின் நிரந்தர கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Babar azam

ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ள ஃபர்ஹான், சமீபத்தில் நடந்த 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பாகிஸ்தான் அணியை வழிநடத்தினார். அந்தப் போட்டியில் இறுதி ஆட்டத்தில் இந்தியாவிடம் 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.

சல்மான் அலி ஆகா 2025 ஆசியக் கோப்பைக்கு முன்னதாக கேப்டன் பொறுப்பை ஏற்றார். ஆனால் அவரது தலைமையிலான அணி ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வியடைந்ததுடன், டி20 உலகக் கோப்பையிலும் ஆரம்பத்திலேயே வெளியேறி ஏமாற்றம் அளித்தது.

நவீன டி20 ஆட்டத்திற்கு ஏற்றவாறு சல்மான் ஆகாவின் பேட்டிங் பங்களிப்பு அமையாதது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்தன. அதே நேரம், ஃபர்ஹான் அணியில் தனது இடத்தை வலுவாகப் பிடித்துள்ளார். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இலங்கைத் தொடருக்கான டி20 அணி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் விளையாடிய அணியே பெரும்பாலமாக இருந்தாலும், அது முக்கிய வீரர்களுக்கு ஓய்வளித்து மாற்று வீரர்களைக் கொண்டு பரிசோதனை முயற்சியாக அமைக்கப்பட்ட அணியாகும்.

2026 டி20 உலகக் கோப்பை அணியுடன் ஒப்பிடும்போது தற்போதைய டி20 அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த அணியில் அப்துல் சமத், அராபத் மின்ஹாஸ், ஹசன் நவாஸ், முகமது இம்ரான் ரந்தாவா, மாஸ் சதாகத், ரசாவுல்லா மற்றும் முகமது சல்மான் மிர்சா ஆகியோர் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் பாபர் அசாம், சல்மான் ஆகா, ஷாஹீன் அஃப்ரிடி ஆகியோருடன் ஃபஹீம் அஷ்ரப், முகமது நவாஸ், உஸ்மான் கான் மற்றும் உஸ்மான் தாரிக் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் டி20 அணி: சாஹிப்ஜாதா ஃபர்ஹான் (கேப்டன்), அப்துல் சமத், அப்ரார் அகம்பு, அராபத் மின்ஹாஸ், ஃபகார் ஜமான், ஹசன் நவாஸ், முகமது இம்ரான் ரந்தாவா, கவாஜா நபாய் (விக்கெட் கீப்பர்), மாஸ் சதாகத், நசீம் ஷா, ரசாவுல்லா, சைம் அயூப், முகமது சல்மான் மிர்சா, ஷதாப் கான், சுஃபியான் முகீம்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முந்தைய தொடருடன் ஒப்பிடும்போது பாகிஸ்தான் ஒருநாள் அணியிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த அணியில் ஃபஹீம் அஷ்ரப், ஃபகார் ஜமான், ஹசன் நவாஸ், ரசாவுல்லா மற்றும் சாத் பெய்க் ஆகியோர் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் அப்துல் சமத், அகமது டேனியல், மாஸ் சதாகத், ரோஹைல் நசீர், சாஹிப்ஜாதா ஃபர்ஹான் மற்றும் ஷாமில் உசேன் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் ஒருநாள் அணி: ஷாஹீன் ஷா அஃப்ரிடி (கேப்டன்), அப்ரார் அகமது, சல்மான் அலி ஆகா, அராபத் மின்ஹாஸ், பாபர் அசாம், ஃபஹீம் அஷ்ரப், ஃபகார் ஜமான், முகமது காஜி கோரி (விக்கெட் கீப்பர்), ஹாரிஸ் ரவூப், ஹசன் நவாஸ், நசீம் ஷா, ரசாவுல்லா, சாத் பெய்க் (விக்கெட் கீப்பர்), சைம் அயூப், ஷதாப் கான், சுஃபியான் முகீம்.

Story first published: Monday, October 5, 2026, 21:50 [IST]
Other articles published on Oct 5, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+