Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பென் ஸ்டோக்ஸ் அவமானப்படுத்தப்பட்டாரா??..பாக். தொடரில் நடந்த சம்பவம்..குழம்பும் ரசிகர்கள்-என்ன ஆனது!

முல்தான்: பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் தொடரில் பென் ஸ்டோக்ஸ் அவமானப்படுத்தப்பட்டாரா என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி முல்தானில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து 26 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் போட்டியிலும் இங்கிலாந்து அணி தான் வெற்றி கண்டிருந்ததால் 2 - 0 என தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. இதன் மூலம் 22 ஆண்டுகளுக்கு பின்பு பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது.

பாகிஸ்தான் தொடர்

பாகிஸ்தான் தொடர்

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 2 இன்னிங்ஸ்களில்ன் முடிவில் 355 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதனை விரட்டி ஆடிய பாகிஸ்தான் அணி முதலில் வலுவாக தான் இருந்தது. சகீல் (94), இமாம் உல் அக் (60) என பார்ட்னர்ஷிப் அமைக்க, அந்த அணி 198/ 4 என வெற்றி பெறும் நிலைமையில் தான் இருந்தது. ஆனால் அவர்கள் அவுட்டான உடன் 319 ரன்களுக்கெல்லாம் 9 விக்கெட்களை இழந்து திணறி அவுட்டானது.

ஸ்டோக்ஸுக்கு நடந்த சம்பவம்

ஸ்டோக்ஸுக்கு நடந்த சம்பவம்

இந்நிலையில் இந்த போட்டியில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அவமானப்படுத்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகின்றன. அதாவது போட்டியின் முடிவில் பாகிஸ்தானின் 10வது பேட்ஸ்மேனாக வந்த முகமது அலியிடம், ஸ்டோக்ஸ் வழக்கம் போல கைக்குலுக்க சென்றார். ஆனால் அவருக்கு கைக்கொடுக்க மறுத்து முகமது அலி திரும்பிக்கொண்டார். இதனால் என்ன செய்வது என புரியாமல் பென் ஸ்டோக்ஸ் முழித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

என்ன காரணம்

என்ன காரணம்

பாகிஸ்தான் 328 /9 என விளையாடிக்கொண்டிருந்த போது முகமது அலி அடித்த பந்து எட்ஜாகி ஒல்லி போப்பிடம் சென்றது. ஆனால் அதனை அவுட் என நம்பாத முகமது அலி டி.ஆர்.எஸ் எடுத்தார். அதனை கவனிக்காத பென் ஸ்டோக்ஸ், அது அவுட் தான் என்ற நம்பிக்கையில் கைக்குலுக்க சென்றார். அப்போது இன்னும் முடிவு வரவில்லை, அதற்குள் கொண்டாட வேண்டாம் எனக்கூறி மறுத்துவிட்டார். ஸ்டோக்ஸும் அதற்கு மரியாதை கொடுத்து நகர்ந்து சென்றுள்ளார்.

பின்னர் என்ன ஆனது?

பின்னர் என்ன ஆனது?

பின்னர் 3வது நடுவரின் முடிவு வந்த பிறகு முகமது அலியே ஸ்டோஸிடம் சென்று வெற்றிக்கு வாழ்த்து கூறி சென்றார். சொந்த மண்ணிலேயே இங்கிலாந்திடம் தொடரை இழந்த பாகிஸ்தான் அணி, சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியவுடனான டெஸ்ட் தொடரிலும் தோல்வியை தழுவியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, December 12, 2022, 19:54 [IST]
Other articles published on Dec 12, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+