Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாகிஸ்தான் அணி, தங்களோட நாட்டுல இருக்கறதவிட இங்கிலாந்துல பாதுகாப்பாவே இருக்கும்

லண்டன் : பாகிஸ்தானில் இருப்பதை காட்டிலும் அந்த நாட்டு வீரர்கள் இங்கிலாந்தில் மிகவும் பாதுகாப்பாகவே இருப்பார்கள் என்று முன்னாள் மேற்கிந்திய பௌலர் மைக்கேல் ஹோல்டிங் தெரிவித்துள்ளார்.

Recommended Video

10 பாக். வீரர்களுக்கு ஒரே நேரத்தில் கொரோனா.. இதுதான் காரணம்

தற்போது இங்கிலாந்தில் தனிமைப்படுத்துதலில் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் உள்ளனர். அதேபோல மைக்கேல் ஹோல்டிங்க்கும் உள்ளார்.

பாகிஸ்தான் வீரர்கள் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆயினும் இங்கிலாந்து சுற்றுப்பயணம் திட்டமிட்டபடி நடக்கும் என்ற பிசிபி தலைமை நிர்வாகி வாசிம் கான் தெரிவித்துள்ளார்.

வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு

வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு

இங்கிலாந்து -பாகிஸ்தான் தொடர் அடுத்த மாதம் இறுதியில் துவங்கி செப்டம்பர் மாதம் வரையில் நடத்தப்பட உள்ளது. இதில் 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. இதை முன்னிட்டு பாகிஸ்தான் வீரர்களுக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்ட நிலையில், அதில் 10 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

10 வீரர்களுக்கு கொரோனா

10 வீரர்களுக்கு கொரோனா

இங்கிலாந்துக்கு வரும் 28ம் தேதி பயணம் மேற்கொள்ளவிருந்த 29 பாகிஸ்தான் வீரர்களுக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்ட நிலையில் 10 வீரர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் கண்டறியப்பட்டுள்ளது. இதில் முதலில் பாசிட்டிவ் உறுதிப்படுத்தப்பட்ட முகமது ஹபீசுக்கு பின்பு எடுக்கப்பட்ட டெஸ்ட்டில் நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது.

பிசிபி திட்டவட்டம்

பிசிபி திட்டவட்டம்

இதனிடையே, வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டாலும் இங்கிலாந்து பயணம் திட்டமிட்டபடி நடக்கும் என்று பிசிபி தலைமை நிர்வாகி வாசிம் கான் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ளதை காட்டிலும் அந்நாட்டு வீரர்கள், இங்கிலாந்தில் மிகவும் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று முன்னாள் மேற்கிந்திய தீவுகள் அணியின் பௌலர் மைக்கேல் ஹோல்டிங் தெரிவித்துள்ளார்.

மைக்கேல் ஹோல்டிங் நம்பிக்கை

மைக்கேல் ஹோல்டிங் நம்பிக்கை

மேலும் வரும் ஜூலை 4ம் தேதியிலிருந்து இங்கிலாந்தில் ஊரடங்கு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் வீரர்களுக்கு அங்கு இருப்பது மேலும் எளிதாகிவிடும் என்றும் ஹோல்டிங் தெரிவித்துள்ளார். யூடியூபில் மிக்கி -ஹோல்டிங் நத்திங் பேக் என்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், பாகிஸ்தான் வீரர்களின் சுற்றுப்பயணத்திற்கு இசிபி மற்றும் அந்நாட்டு மக்கள் வேண்டுமானால் தடை விதிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, June 24, 2020, 19:19 [IST]
Other articles published on Jun 24, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+