Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இறுதிப்போட்டிக்கு சென்ற பாகிஸ்தான்..நியூசி,யை வச்சு செய்த பாபர் - ரிஸ்வான் ஜோடி.. இப்படி ஒரு மாற்றமா

சிட்னி: டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு அபார வெற்றியுடன் நுழைந்துள்ளது பாகிஸ்தான் அணி.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் டாஸில் இருந்தது போன்ற அதிர்ஷ்டம் அந்த அணிக்கு பேட்டிங்கில் அமையாமல் போனது.

தொடக்கமே அதிர்ச்சி

தொடக்கமே அதிர்ச்சி

நியூசிலாந்து அணியில் ஆபத்தான வீரராக பார்க்கப்பட்ட ஓப்பனர் ஃபின் ஆலன் 4 ரன்களுக்கு அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். மற்றொரு ஓப்பனிங் வீரரான டெவோன் கான்வேவும் 21 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். இதன்பின்னர் வந்த அதிரடி ஆட்டக்காரர் க்ளென் பிலிஃப்ஸும் 6 ரன்களுக்கு வெளியேறியதால் அந்த அணி 49 ரன்களுக்குள் 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

கேப்டனின் இன்னிங்ஸ்

கேப்டனின் இன்னிங்ஸ்

இக்கட்டான சூழலில் ஜோடி சேர்ந்த கேப்டன் வில்லியம்சன் - டேர்லி மிட்செல் நிதானமாக பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சீரான வேகத்தில் இவர்கள் ரன் உயர்த்தியதால் 49/3 என இருந்த ஸ்கோர் 4வது விக்கெட்டிற்கு 117 ரன்களுக்கு சென்றது. நீண்ட நேரத்திற்கு பின்பு அதிரடி காட்ட முயன்ற கேப்டன் வில்லியம்சன் 46 ரன்களுக்கு துரதிஷ்டவசமாக அவுட்டானார்.

போராடி ரன் சேர்ப்பு

போராடி ரன் சேர்ப்பு

எனினும் மறுமுணையில் அதிரடியாக விளையாடிய டேர்லி மிட்செல் கடைசி வரை நின்று நியூசிலாந்தை காப்பாற்றினார். 35 பந்துகளை சந்தித்த அவர் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 53 ரன்களை குவித்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 152 ரன்களை குவித்தது.

சிறப்பான பார்ட்னர்ஷிப்

சிறப்பான பார்ட்னர்ஷிப்

சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி, சிட்னி மைதானத்தில் இந்த ஸ்கோரை அடிப்பது கடினமாக பார்க்கப்பட்டது. ஆனால் அதனை முற்றிலும் அமைத்தனர் ஓப்பனிங் ஜோடி. முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் மீண்டும் தங்களது பழைய ஃபார்முக்கு திரும்பினர். முதல் பந்தில் இருந்தே அதிரடி காட்டியதால் முதல் விக்கெட்டிற்கு 105 ரன்களை குவித்தனர்.

அபார வெற்றி

அபார வெற்றி

சிறப்பாக விளையாடிய கேப்டன் பாபர் அசாம் 42 பந்துகளில் 53 ரன்களை விளாசினார். அவருக்கு உறுதுணையாக நின்று ஆடிய முகமது ரிஸ்வான் 43 பந்துகளில் 57 ரன்களை குவித்தார். இதன் பின்னர் வந்த முகமது ஹாரிஸ் 26 பந்துகளில் 30 ரன்களை அடிக்க பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 153 ரன்களை சேர்த்து வெற்றி கண்டது. இதன் மூலம் இறுதிப்போட்டிக்கும் தகுதிப்பெற்றது.

Story first published: Wednesday, November 9, 2022, 17:19 [IST]
Other articles published on Nov 9, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+