For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தோனிக்கு பதிலடி..? லீக்கான பாக். ரகசிய திட்டம்..?

லண்டன்:இந்தியாவிற்கு எதிரான போட்டியில், பாகிஸ்தான் வீரர்கள் போட்டிருந்த திட்டம் தற்போது வெளியாகியுள்ளது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சவுதாம்ப்டன் நகரில் இந்தியாஇ தென் ஆப்ரிக்க அணிகள் மோதிய உலக கோப்பை போட்டியின் போது, விக்கெட் கீப்பர் தோனி, பாரா மிலிட்டரியின் பாலிடன் முத்திரை பதித்த கையுறைகளை அணிந்திருந்தார். இதற்கு சமூக வலைத்தளங்களில் பலர் ஆதரவும், வரவேற்பும் தெரிவித்திருந்தனர்.

முதலில் இந்த விவகாரத்தில் தோனிக்கு ஆதரவு தெரிவித்த பிசிசிஐ, ஐசிசியின் உத்தரவால் கம்மென்று இருக்கிறது. ஐசிசியை காட்டமாக விமர்சித்திருந்தார் கம்பீர். தற்போது இந்த விவகாரம் இந்திய கிரிக்கெட்டில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்பட்டு வருகிறது.

உங்க வேலை என்னவோ... அதை மட்டுமே பாருங்க... தோனி விவகாரத்தில் மூச்..!! ஐசிசியை பங்கம் செய்த அவர் உங்க வேலை என்னவோ... அதை மட்டுமே பாருங்க... தோனி விவகாரத்தில் மூச்..!! ஐசிசியை பங்கம் செய்த அவர்

விமர்சிக்கப்பட்ட தொப்பி விவகாரம்

விமர்சிக்கப்பட்ட தொப்பி விவகாரம்

முன்னதாக புல்வாமா தாக்குதலில் இறந்த வீரர்களுக்கு அஞ்சலி செத்தும் விதமாக,கடந்த மார்ச் மாதம் இந்தியா, ஆஸ்திரேலியா ஒரு நாள் போட்டியின் போது இந்திய வீரர்கள் ராணுவ தொப்பி அணிந்து விளையாடினர். இந்த 2 செயல்களுக்கும் பாகிஸ்தானிலிருந்து கடும் எதிர்ப்புகளும், விமர்சனங்களும் கிளம்பின.

இந்தியா, பாக். மோதல்

இந்தியா, பாக். மோதல்

இதற்கிடையே பாகிஸ்தான் அமைச்சர் பவத் சவுத்ரி, தோனியின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். சர்வதேச விளையாட்டில் இது போன்ற செயல்களை அனுமதிக்க கூடாது என கடுமையாக விமர்சித்திருந்தார். இதனிடையே இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் உலக கோப்பை போட்டிகளானது வரும் 16ம் தேதி நடைபெறுகிறது.

பாக். பிளான்

பாக். பிளான்

இந்த உலக கோப்பை போட்டியின் முக்கிய போட்டி என்றால்...அது இந்தியா, பாகிஸ்தான் மோதும் போட்டிதான். அந்த முக்கிய போட்டியில் தோனியின் செயலுக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் வீரர்கள் திட்டமிட்டிருந்தனர்.

கிரிக்கெட் வாரியம் மறுப்பு

கிரிக்கெட் வாரியம் மறுப்பு

போட்டியில் ஒவ்வொரு வீரரும் அவுட் ஆகும் போது, வித்தியாசமான முறையில் களத்தில் கொண்டாட, அவர்கள் திட்டமிட்டிருந்தனர். இதனை அறிந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடுமையாக அதனை மறுத்து விட்டது.

அரசு அறிவுறுத்தல்

அரசு அறிவுறுத்தல்

வீரர்கள் விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும் என்றும், அரசியல் ரீதியாக செயல்பாடுகளை செய்யக் கூடாது என்று இம்ரான் கான் அறிவுறுத்தியதாக, பாகிஸ்தான் அரசு தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகின. இந்த விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Sunday, June 9, 2019, 0:00 [IST]
Other articles published on Jun 9, 2019
English summary
Pakistan team plan leaked against Indian match in world cup series 2019.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X