Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்று தரமான சம்பவம் இருக்கு.. வாழ்வா? சாவா? கட்டம்.. பாக். vs தென்னாப்பிரிக்கா போட்டி.. காரணம் என்ன?

அடிலெய்ட்: டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு இன்று மிகவும் முக்கியமான வாழ்வா? சாவா? போட்டி நடைபெறவுள்ளதால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி இன்று மதியம் சிட்னி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

பாகிஸ்தான் அணி தனது அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க வேண்டுமென்றால் ஒரு தோல்விக்கூட பெறாத தென்னாப்பிரிக்க அணியை இன்று வீழ்த்தியே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இன்றைய போட்டி

இன்றைய போட்டி

குரூப் பி பிரிவுக்கான புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்திலும், தென்னாப்பிரிக்கா 5 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் உள்ளது. 3 போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்ற பாகிஸ்தான் அணி 2 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது. எனினும் பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்குள் நுழைவதற்கு இன்னும் வாய்ப்புகள் உள்ளன.

வாய்ப்புகள் என்ன?

வாய்ப்புகள் என்ன?

பாகிஸ்தான் அணி தனது அடுத்த 2 போட்டிகளில் தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேசத்தை வீழ்த்த வேண்டும். அதன்பின்னர் நெதர்லாந்து அணியுடனான போட்டியில் தென்னாப்பிரிக்கா தோற்றுவிட்டாலும் சரி, போட்டி மழையில் ரத்தானாலும் சரி, பாகிஸ்தான் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிவிடலாம். அல்லது, 2 போட்டிகளில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று, இந்திய அணி ஜிம்பாப்வே அணியுடன் அதிக வித்தியாசத்தில் தோற்க வேண்டும். இப்படி நடந்தால் அரையிறுதிக்கு செல்லலாம்.

இன்று முடிவு தெரியும்

இன்று முடிவு தெரியும்

ஆனால் இந்த இரண்டு வாய்ப்புமே இன்றைய போட்டியை வைத்து தான் உள்ளது. தென்னாப்பிரிக்க அணியுடன் ஒருவேளை பாகிஸ்தான் தோற்றுவிட்டால், அதன்பின் எந்தவித கணக்குகளும் கிடையாது, நேரடியாக வெளியேறிவிடும். இதனால் பாகிஸ்தானின் போராட்டத்தை பார்ப்பதற்கான எதிர்பார்ப்பு ஏகபோகத்திற்கு எகிறியுள்ளது.

பாபர் அசாமின் ஆட்டம்

பாபர் அசாமின் ஆட்டம்

இரு அணிகளும் மோதும் போட்டி சிட்னியில் உள்ள மைதானத்தில் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்கவுள்ளது. பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் அசாம் மிகவும் மோசமாக சொதப்பி வருகிறார். ஒருவேளை இன்று அவர் கம்பேக் கொடுத்தால் நிச்சயம் பாகிஸ்தான் தாக்கத்தை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.

Story first published: Thursday, November 3, 2022, 12:57 [IST]
Other articles published on Nov 3, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+