Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல்-தான் ஆடுவேன்.. பாகிஸ்தானுக்கு ‘பெப்பே’ காட்டிய ஜிம்பாப்வே வீரர்.. வழக்குத் தொடர PCB முடிவு

லாகூர்: பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரை விட ஐபிஎல் தொடரே முக்கியம் என கருதி, பாகிஸ்தான் சூப்பர் லீக் ஒப்பந்தத்தை மீறிய ஜிம்பாப்வே அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிளெஸ்ஸிங் முசராபனி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தீவிரமாக முடிவெடுத்துள்ளது. இது கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மார்ச் 26 முதல் மே 3 வரை நடைபெற உள்ள பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில், இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்காக ஷமர் ஜோசப்புக்கு மாற்று வீரராக 11 மில்லியன் ரூபாய் ஒப்பந்தத்தில் முசராபனி கையெழுத்திட்டிருந்தார். ஆனால், திடீரென அந்த ஒப்பந்தத்தை பாதியில் முறித்துக் கொண்ட அவர், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இணைய முடிவெடுத்துள்ளார்.

Pakistan to Sue Blessing Muzarabani After He Skips PSL for IPL Zimbabwe Bowler Snubs Pakistan

கொல்கத்தா அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட முஸ்தாபிசுர் ரஹ்மானுக்கு பதிலாக அவர் அந்த அணியில் இணைந்துள்ளார். இதனால் கொதிப்படைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ஒப்பந்த மீறல் அடிப்படையில் அவர் மீது வழக்குத் தொடர முடிவு செய்து இருக்கிறது. பாகிஸ்தான் சூப்பர் லீக் ஒப்பந்தத்தை மீறி ஒரு வீரர் ஐபிஎல் தொடருக்குச் செல்வது இது 2வது முறையாகும்.

கடந்த ஆண்டு பெஷாவர் சால்மி அணியில் ஒப்பந்தமான தென் ஆப்பிரிக்காவின் கார்பின் போஷ், அதனை மீறி மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்ததால் அவருக்கு பாகிஸ்தான் தொடரில் விளையாட ஒரு சீசனுக்கு தடை விதிக்கப்பட்டது. அதே போன்ற கடுமையான நடவடிக்கை முசராபனி மீதும் பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் ஜிம்பாப்வே அணிக்காக முசராபனி அபாரமாக பந்துவீசினார். 6 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி, தனது அணியை சூப்பர் 8 சுற்றுக்கு அழைத்துச் செல்வதில் முக்கிய பங்கு வகித்தார். குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார். இவரது இந்த அபாரமான ஃபார்ம் காரணமாகவே கொல்கத்தா அணி இவரை வளைத்துப் போட்டுள்ளது.

பணமழை பொழியும் ஐபிஎல் தொடரின் ஈர்ப்பு காரணமாக முன்னணி வீரர்கள் பலரும் அதில் விளையாடவே அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் வெளிநாட்டு வீரர்களை தக்கவைக்க முடியாமல் பெரும் தர்மசங்கடத்தை சந்தித்து வருகிறது. முசராபனி மீது உண்மையில் வழக்கு தொடுக்கப்படுமா? அல்லது வழக்கம் போல பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு சலசலப்பை கிளப்பி விட்டு அமைதியாக இருக்குமா? என்ற சந்தேகமும் உள்ளது.

Story first published: Saturday, March 14, 2026, 20:58 [IST]
Other articles published on Mar 14, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+