Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முத்தரப்பு டி20 தொடர் இன்று தொடக்கம்.. பாபர் அசாம்க்கு பிடித்த அணியுடன் பாகிஸ்தான் மோதல்.. எதில் காணலாம்

மும்பை: பாகிஸ்தானில் இன்று முத்தரப்பு கிரிக்கெட் டி20 தொடர் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் பாகிஸ்தான், இலங்கை மற்றும் மூன்றாவது அணியாக ஜிம்பாப்வே பங்கேற்கிறது. அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை நடைபெறும் நிலையில், அதற்கு தயாராகும் விதமாக இந்த தொடர் நடத்தப்படுகிறது.

நவம்பர் 18ஆம் தேதி தொடங்கும் இந்த தொடர் நவம்பர் 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் ஏழு போட்டிகள் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி 6.30 மணிக்கு தொடங்கும்.

Pakistan Tri series

ஆனால் இந்த போட்டி இந்தியாவில் உள்ள தொலைக்காட்சி மற்றும் ஓடிடி தளங்களில் நேரலை செய்யப்படாது. இருப்பினும் youtube தளத்தில் ஸ்போர்ட்ஸ் டிவி(Sports Tv) என்ற சேனலில் இந்த போட்டிகள் நேரலை செய்யப்படும் என தெரிகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற டி20 போட்டிகளில் பாகிஸ்தான அணி 17 வெற்றியும், 12 தோல்விகளையும் தழுவி இருக்கிறது.

கடைசியாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2க்கு 1 என்ற கணக்கில் அந்த அணி வென்றுள்ளது. ஆசிய கோப்பையை இழந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி புதிய உத்வேகத்துடன் இருக்கின்றது. குறிப்பாக பாபர் அசாம், ஃபார்முக்கு திரும்பி இருப்பதால் அந்த அணி பேட்டிங் பலமாக உள்ளது.

இலங்கை அணியை பொறுத்தவரை அசலங்கா உடல்நிலை சரியில்லை எனக் கூறி தாயத்துக்கு திரும்பி விட்டார். இதனால் தசுன் சனக்கா தற்காலிக கேப்டனாக செயல்பட உள்ளார். ஜிம்பாப்வே அணியை பொறுத்தவரை தற்போது அடுத்த டி20 உலக கோப்பைக்கு தகுதி பெற்று இருப்பதால் அந்த தொடருக்கு தயாராகும் விதமாக இந்த போட்டிகளில் விளையாடும்.

கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தியது. இதனால் ஜிம்பாப்வே அணியும் சாதாரணமாக நினைத்து விட முடியாது. பாதுகாப்பு காரணங்களால் இந்த தொடர் முழுவதும் ராவல்பிண்டியில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் விளையாடும் 3 அணிகளின் விவரத்தை தற்போது பார்க்கலாம்.

பாகிஸ்தான் அணி:
சாஹிப்சாதா பர்ஹான், சைம் அயூப், பாபர் ஆசாம், பக்ஹர் சமான், உஸ்மான் கான் (விக்கெட் கீப்பர்), சல்மான் அலி ஆகா (கேப்டன்), முகமது நவாஸ், பஹீம் அஷ்ரஃப், ஷஹீன் ஆப்ரிடி, நசீம் ஷா, அப்ரார் அஹமது, முகமது வாசிம் ஜூனியர், சல்மான் மிர்சா, உஸ்மான் தாரிக், அப்துல் சமத்

ஜிம்பாப்வே அணி:
பிரையன் பென்னெட், டயான் மியர்ஸ், ப்ரெண்டன் டெய்லர் (விக்கெட் கீப்பர்), சிகந்தர் ராசா (கேப்டன்), ரயான் பர்ல், தஷிங்கா முசெகிவா, க்ளைவ் மடாண்டே, பிராட் இவான்ஸ், தினோதெண்டா மபோசா, வெலிங்டன் மசகத்சா, ரிச்சர்ட் ந்கராவா, கிரேம் க்ரீமர், டோனி முன்யோங்கா, தடிவனாஷே மருமானி, நியூமன் நியாம்ஹுரி

இலங்கை அணி:
தசுன் ஷானக (கேப்டன்), பத்தும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, கமில் மிஷாரா, கமிந்து மெண்டிஸ், பவன் ரத்னாயக்கே, பனுகா ராஜபக்ஷ, ஜனித் லியானகே, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷண, துஷான் ஹேமந்த, துஷ்மந்த சமீரா, நுவான் துஷாரா, ஏஷான் மலிங்கா

Story first published: Tuesday, November 18, 2025, 11:23 [IST]
Other articles published on Nov 18, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+