பாதுகாப்பு தர்றது கஷ்டம்… வேண்டாம்.. பாகிஸ்தானுடனான கிரிக்கெட் தொடரை ரத்து செய்த இலங்கை
கொழும்பு:இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருவதை அடுத்து பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டடுள்ளது.
19 வயதுக்குட்பட்டோருக்கான பாகிஸ்தான் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட அட்டவணை தயாரிக்கப்பட்டிருந்தது. முதல் போட்டி மே 3ம் தேதி நடைபெறவிருந்தது. அதற்காக பாகிஸ்தான் அணியினர் ஏப்ரல் 30-ம் தேதி கொழும்பு செல்ல இருந்தனர்.
இந்நிலையில் இலங்கையில் தொடர் குண்டு வெடிப்புகள் நடைபெற்று வருவதால் அங்கு நடைபெறவிருந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

பாக். கருத்து
போட்டி ரத்து குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியிருப்பதாவது: இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தால் வீரர்களின் பாதுகாப்பு கருதி போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. போட்டியை எப்போது வைத்துக்கொள்ளலாம் என்பது குறித்து இரு நாட்டு கிரிக்கெட் வாரியமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

போட்டி குறித்து ஆலோசனை
ஜூன் மாதம் தென் ஆப்பிரிக்கா,பாகிஸ்தான் அணிகள் விளையாட இருக்கின்றன. எனவே, அதற்கு முன்னதாக போட்டியை வைக்க முடியுமா என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.

தாக்குதல்
முன்னதாக, இலங்கை தலைநகர் கொழும்பில் கடந்த வாரம் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தொடர் வெடிகுண்டு தாக்குதல்களில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

பதற்றம் நீடிப்பு
அதனைத் தொடர்ந்து இலங்கையில் தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டுள்ளனர். வெடிகுண்டு தாக்குதல்களால் இலங்கையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.


Click it and Unblock the Notifications