Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வீசி எறியப்பட்ட ஜெர்ஸி.. அம்பயரே கோபத்தில் கொந்தளிப்பு.. பாகிஸ்தான் போட்டியில் பரபர சம்பவம்- விவரம்

கராச்சி: பாகிஸ்தான் அணி விளையாடிய ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் களத்தில் இருந்த நடுவர் கடும் கோபத்தில் ஜெர்ஸிகளை தூக்கி விசிறி சென்ற வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

சமீப காலமாக அம்பயர்கள் மீது கிரிக்கெட் வீரர்கள் சண்டையிடுவது வழக்கமாகி வருகிறது. வங்கதேச பிரீமியர் லீக்கில் கூட சீனியர் வீரர் சகிப் அல் ஹசன் களத்தில் இருந்த அம்பயரை பேட்டால் அடிப்பது போன்று சென்றார்.

தவறான முடிவுகளை கொடுப்பதே இதற்கு காரணங்களாகவும் பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அம்பயர் ஒருவர், கிரிக்கெட் வீரர் மீது கோபப்பட்டு சென்ற சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியுள்ளது.

நியூசி, தொடர்

நியூசி, தொடர்

பாகிஸ்தானுக்கு சென்றுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் மோதி வருகிறது. 2வது போட்டி நேற்று கராச்சியில் நடைபெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்தின் இன்னிங்ஸில் தான் அந்த சம்பவம் நடந்தது. ஆட்டத்தின் 36வது ஓவரை ஹாரிஸ் ராஃப் வீச அதனை பேட்ஸ்மேன் சிங்கிள் அடித்தார். அப்போது ஃபீல்டிங்கில் இருந்த முகமது வசீம், உடனடியாக நான் ஸ்ட்ரைக்கர் ஸ்டம்புகளுக்கு வீசினார்.

அம்பயர் கோபம்

அம்பயர் கோபம்

ஸ்கொயர் லெக் திசையில் இருந்து வீசப்பட்ட அந்த, பந்து நேராக ஸ்டம்புகளை அடிக்கும் என நினைத்த நிலையில் அங்கிருந்த அம்பயர் அலீம் தாரின் காலிலேயே வேகமாக பட்டது. வலியால் உடனடியாக அங்கிருந்து நகர்ந்த அவர், ஆத்திரத்தில் தனது கையில் வைத்திருந்த பவுலரின் ஜெர்ஸியை கீழே வீசியிருந்தார். பின்னர் வலியை சமாளிக்க, நடந்துக்கொண்டே இருந்தார்.

உதவி செய்த வீரர்

உதவி செய்த வீரர்

அம்பயர் அடிபட்டதை பார்த்து மற்ற வீரர்கள் வேடிக்கையில் சிரித்துக்கொண்டிருக்க, வேகப்பந்துவீச்சாளர் நசீம் ஷா மட்டும் அவருக்கு உதவினார். சற்று யோசிக்காமல் ஓடி வந்து அம்பயரின் கால்களை நன்கு தேய்த்துவிட்டு, வீக்கம் ஏற்படாமல் முதலுதவி கொடுத்தார். இதற்கு நடுவரும் நெகிழ்ச்சியில் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

நியூசி, அபாரம்

நியூசி, அபாரம்

இந்த சம்பவங்கள் ஒருபுறம் இருக்க, நியூசிலாந்து அபார வெற்றியை பதிவு செய்துவிட்டது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 49.5 ஓவர்களில் 261 ரன்களை குவித்தது. இதன்பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி 43 ஓவர்களில் 182 ரன்களுக்கெல்லாம் அனைத்து விக்கெட்களையும் இழந்துவிட்டது. முதல் போட்டியில் பாகிஸ்தான் வென்றுள்ளதால் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடர் 1 - 1 என சமநிலையில் உள்ளது.

Story first published: Thursday, January 12, 2023, 11:49 [IST]
Other articles published on Jan 12, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+