Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வரலாற்று முதல் டெஸ்ட் டெஸ்ட் - பாக். VS ஆஸி. நாளை மோதல்.. 8537 நாட்களுக்கு பிறகு பலப்பரீட்சை

ராவல்பிண்டி: பாகிஸ்தானுக்கு 24 ஆண்டுகளுக்கு பிறகு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.

வரலாற்று சிறப்பு மிக்க இந்த டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சொந்த மண்ணில் பாகிஸ்தானை எதிர்கொள்வது ஆஸ்திரேலிய அணிக்கு எளிதான காரியம் அல்ல.

பின்னடைவு

பின்னடைவு

பல ஆண்டுகளுக்கு பிறகு இந்தப் போட்டி நடைபெறுவதால் ரசிகர்கள் மத்தியில் இந்த தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது,. பாகிஸ்தான் அணியில் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஹசன் அலி, ஆல்ரவுண்டர் ஃபஹிம் அஸரப் ஆகியோர் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளது, அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் அணி

பாகிஸ்தான் அணி

பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் அபித் அலியும் , இதய பிரச்சினை காரணமாக கிரிக்கெட் போட்டியிலிருந்து விலகியுள்ளார். பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஃபாவத் ஆலம் ஆகியோரை நம்பியே பாகிஸ்தான் பேட்டிங் உள்ளது. வேகப்பந்து வீச்சில் ஷாகின் ஷா ஆப்ரிடி, நசிம் ஷா, வசிம் ஜூனியர் ஆகிய வீரர்களை கொண்டு களமிறங்க உள்ளது.

ஆஸ்திரேலிய அணி

ஆஸ்திரேலிய அணி

ஆஸ்திரேலிய அணி 3 ஆண்டுகளுக்கு பிறகு வெளிநாட்டில் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. காயத்திலிருந்த ஜேசன் ஹேசல்வுட் அணிக்கு திரும்பியுள்ளார். ஆஸ்திரேலிய அணியில் வார்னருக்கு தொடக்க வீரராக உஸ்மான் கவாஜா களமிறங்க உள்ளார். லாபஸ்சேங், ஸ்மித், டிராவிஸ் ஹேட், மிட்செல் மார்ஷ் போன்ற பலமான வீரர்கள் ஆஸ்திரேலிய அணியில் உள்ளனர்.

Recommended Video

IPL 2022 : BCCI instructs IPL Teams to reach Mumbai from Mar 8 | Oneindia Tamil
எந்த சேனல்?

எந்த சேனல்?

துபாயில் இருக்கும் ஆடுகளம் போல் ராவல்பிண்டி ஆடுகளம் இருப்பதாக ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயான் கூறியுள்ளார். இதனால் அந்த அணி 2 சுழற்பந்துவீச்சாளர்களை கொண்டு களமிறங்கலாம். பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சை எப்படி ஆஸ்திரேலிய வீரர்கள் எதிர்கொள்கிறார்கள் என்பதை பொறுத்தே அந்த அணியின் வெற்றி இருக்கும். பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்காமல் இருந்ததும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. முதல் போட்டி நாளை இந்திய நேரப்படி 10.30 மணிக்கு தொடங்கும். சோனி சிக்ஸ், சோனி நெட்வோர்கில் இந்தப் போட்டியை நேரலையில் காணலாம்.

Story first published: Thursday, March 3, 2022, 16:54 [IST]
Other articles published on Mar 3, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+