Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வீடியோ- ஆஸியிடமே வேலையை காட்டிய பாக்.. ஃபில்டிங்கில் நிகழ்ந்தது விபத்தா? போங்கா? 5 ரன் ஏன் தரவில்லை?

சிட்னி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி தடுமாறி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் கடந்த மூன்றாம் தேதி தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 313 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இரண்டாவதாக பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 299 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

Pakistan vs australia - How Pakistan avoided 5 penalty runs despite committed error in the field


இதனை அடுத்து 14 ரன்கள் முன்னிலையில் இருந்த பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக விளையாடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மூன்றாம் நாள் ஆட்ட நேரம் முடிவில் 68 ரன்களுக்கு ஏழு விக்கெட் என்ற நிலையில் தடுமாறி வருகிறது. தற்போது ஆஸ்திரேலியாவை விட பாகிஸ்தான் அணி 82 ரன்கள் தான் முன்னிலையில் இருக்கிறது. இந்தப் போட்டியின் போது நிகழ்ந்த சம்பவம் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அதாவது மூன்றாவது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது ஆஸ்திரேலிய அணி 164 ரன்கள் இரண்டு விக்கெட் இழந்து இருந்தபோது ஸ்மித், சஜித் விசிய பந்தை தூக்கி அடித்தார். அது பவுண்டரியை நோக்கி சென்றது. அப்போது பந்தை தடுப்பதற்காக ஓடி வந்த பாகிஸ்தான் வீரர் ஷயிம் அயூப் முயற்சி செய்தபோது மைதானத்தில் புல் தரை கழன்று அவருடைய காலில் சிக்கியது. இதில் தடுமாறி ஆயூப் கீழே விழுந்தார்.



அப்போது அவருடைய தொப்பி கீழே விழுந்து பந்தை தடுத்தது. இதன் அடுத்து உடனடியாக எழுந்து நின்ற ஆயூப் பந்தை தூக்கி எறிந்தார். இதனால் அந்த பவுண்டரி தடுக்கப்பட்டது.எனினும் கிரிக்கெட்டில் பில்டிங் செய்யும் போது வீரர்களின் தொப்பி மற்றும் ஹெல்மெட்டில் பந்து பட்டால் அதற்கு ஐந்து ரன்கள் அபராதமாக வழங்கப்படும். அப்படி இருக்க இந்த நிகழ்வின் ஐந்து ரன்கள் தரவில்லை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

மேலும் வேண்டுமென்றே தொப்பியை கீழே போட்டு அயூப் பந்தை தடுத்ததாகவும் சிலர் குற்றம் சாட்டினர். எனினும் இதனை சோதித்த நடுவர்கள் மைதானத்தில் புல் தரை சேதமடைந்து அவருடைய காலில் சிக்கியதால் தான் அவர் கீழே விழுந்து தொப்பியில் பந்து பட்டதாகவும், இது விபத்து என்பதால் ஐந்து ரன்கள் கொடுக்கத் தேவையில்லை என்று நடுவர்கள் முடிவு எடுத்து விட்டனர்.இது விபத்து என்று பாகிஸ்தான் ரசிகர்களும், இதனை ஏமாற்றி விட்டார்கள் என்று ஆஸ்திரேலியா ரசிகர்களும் தற்போது சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Story first published: Friday, January 5, 2024, 15:25 [IST]
Other articles published on Jan 5, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+